யாழ். பல்கலைக்கழக ஊடகக்கற்கைகள் நடாத்தும் ஒளிப்பட கண்காட்சியும், விவரணப்படங்கள் திரையிடலும்

(UTV|COLOMBO)-யாழ். பல்கலைக்கழக ஊடகக்கற்கைகள் நடாத்தும் ‘இருளென்பது குறைந்த ஒளி’ என்னும் கருப்பொருளிலான ஒளிப்படக் கண்காட்சியும், விவரணப்படங்கள் திரையிடலும் இடம்பெறவுள்ளது. யாழ். பல்கலைக்கழகத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை (18) காலை 9.30க்கு ஆரம்பமாகவுள்ள இந்தக் கண்காட்சியில் ஊடகக் கற்கை நெறி பயிலும் மாணவர்களால் தேர்வுசெய்யப்பட்ட நூற்றுக்கும் அதிகமான ஒளிப்படங்கள் இடம்பெறவுள்ளன. இந்த ஒளிப்படங்கள் யாவும் இயற்கை ஒளியமைப்பைப் பயன்படுத்தியே பதிவுசெய்யப்பட்டவை என்பதுடன், மக்களின் பண்பாடு, பொருளியல், சமூக வாழ்க்கை, சுற்றுச் சூழல் என்பவை இவற்றின்வழி வெளிக்கொண்டுவரப்படுவதும் குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த…

Read More