பொதுநலவாய விளையாட்டு போட்டிக்கான வீர, வீராங்கனைகள் தெரிவு

(UTV|COLOMBO)-எதிர்வரும் ஏப்ரல் மாதம் அவுஸ்திரேலியாவின் கோல் கோஷ்ட் நகரில் இடம்பெறவுள்ள பொதுநலவாய ஒன்றிய விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ள உள்ள மெய்வல்லுனர் வீர, வீராங்கனைகளைத் தெரிவு செய்வதற்கான போட்டி ஹோமாகம – தியகம சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. இலங்கையில் உயரம் பாய்தலில் தேசிய வீரர் மஞ்சுள குமார, மீற்றர் 2.24 உயரத்தைப் பாய்ந்துள்ளார். 800 மீற்றர் தேசிய மகளிர் வீராங்கனையான நிமாலி லியனாரச்சி, கயந்திகா அபேரத்ன ஆகியோர் 2 நிமிடம் 5 வினாடிகளில் குறிப்பிட்ட தூரத்தை ஓடி…

Read More

திறமையான வீர வீராங்கனைகளுக்கு வெளிநாட்டில் பயிற்சி

(UDHAYAM, COLOMBO) – தடை செய்யப்பட்ட போதைப்பொருள் பாவனை தொடர்பில் எதிர்காலத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்படுமென்று விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இதற்கான சட்டங்களை கொண்டுவர எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆசிய மெய்வல்லுனர் போட்டியில் பங்கேற்றுவிட்டு நாடு திரும்பிய இலங்கை அணியை விளையாட்டு அலுவல்கள் அமைச்சில் நேற்று இடம்பெற்ற வரவேற்கும் வைபவத்தில் அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். திறமையான வீர வீராங்கனைகளுக்கு வெளிநாட்டில் மேலதிக பயிற்சிகள் வழங்கப்படுமென்றும் அமைச்சர் இதன்போது கூறினார். ஆசிய மற்றும் பொதுநலவாய…

Read More

தேசிய வீர விருது விழா

(UDHAYAM, COLOMB) – வீரப் பொதுமகன் மன்றம் ஏற்பாடு செய்த தேசிய வீர விருது வழங்கும் விழா சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. கொழும்பு தாமரை தடாக அரங்கில் நேற்று இடம்பெற்ற இந்த நிகழ்வில் 12 பேர் வீர விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். அரநாயக்க சாமசரகந்த மண்சரிவில் தமது உயிரைப் தியாகம் செய்து பலரை காப்பாற்றிய எரங்க விக்ரமசிங்க சார்பில் முதன்மை விருது வழங்கப்பட்டது. மூன்று தசாப்தங்களுக்கு முன்னர், தமது பாதுகாப்பை துச்சமென மதித்து பல…

Read More