வெற்றியாளர் கிண்ண தொடர் – பாகிஸ்தான் அணிக்கு 237 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

(UDHAYAM, COLOMBO) – வெற்றியாளர் கிண்ணப்போட்டியில ்தற்போது இடம்பெறும் தீர்மானமிக்க போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு 237 ஓட்டங்களை வெற்றி இலக்காக இலங்கை அணி நிர்ணயித்துள்ளது. போட்டியில் நாயண சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு அழைப்பு விடுத்தது. அதன்படி , முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49.2 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 236 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இலங்கை அணி சார்பில் அதிகபட்ச ஓட்டங்களாக நிரோஷன் திக்வெல்ல 73 ஓட்டங்களையும்…

Read More

வெற்றியாளர் கிண்ண கிரிக்கட் தொடரில் இருந்து உமர் அக்மல் நீக்கம்

(UDHAYAM, COLOMBO) – இங்கிலாந்தில் நடைபெறவுள்ள வெற்றியாளர் கிண்ண கிரிக்கட் சுற்றுப் போட்டித் தொடரில் இருந்து பாகிஸ்தானின் துடுப்பாட்ட வீரர் உமர் அக்மல் நீக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே அவர் இங்கிலாந்து சென்றிருந்த நிலையில், தற்போது அவர் நாட்டுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல் தகுதி தொடர்பான இரண்டு சோதனைகளிலும் அவர் தோல்வி அடைந்த நிலையில், இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக, பாகிஸ்தான் கிரிக்கட் சபை தெரிவித்துள்ளது. அவருக்கு பதிலாக உமர் அமின் அல்லது ஹரிஸ் சொஹைல் ஆகியோரில் ஒருவர் தெரிவு செய்யப்படவுள்ளதாக…

Read More

வெற்றியாளர் கிண்ணத் தொடரில் மார்க்ஸ் ஸ்டோனிஸ்

(UDHAYAM, COLOMBO) – அவுஸ்திரேலிய அணியின் வீரரான மார்க்ஸ் ஸ்டோனிஸ், (Marcus Stoinis) வெற்றியாளர் கிண்ணத் தொடரில் பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த அவர், தோள்பட்டையில் உபாதை காரணமாக சிகிச்சைக்காக நாடு திரும்பினார். இதன் காரணமாக இங்கிலாந்தில் எதிர்வரும் ஜுன் மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ள வெற்றியாளர் கிண்ண தொடரில் பங்கேற்பதில் நம்பிக்கையற்ற நிலைமை ஏற்பட்டிருந்தது. எனினும் தோள்பட்டை உபாதையிலிருந்து தற்போது குணமடைந்து உடல் தகுதியை…

Read More

வெற்றியாளர் கிண்ண கிரிக்கட் தொடர்: முழு விபரம் இதோ!

(UDHAYAM, COLOMBO) – இங்கிலாந்தின் இலண்டன் ஒவல் , எட்க்பாஸ்டன் மற்றும் கார்டிஃப் மைதானங்களில் இடம்பெறவுள்ள வெற்றியாளர் கிண்ண கிரிக்கட் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணியினர் இம்மாதம் 18ம் திகதி கென்ட் மாநிலத்தை நோக்கி புறப்படவுள்ளனர். இந்த ஒருநாள் போட்டித் தொடரில் ‘ஏ’ பிரிவில் அவுஸ்திரேலியா , நியூசிலாந்து , இங்கிலாந்து மற்றும் பங்காளதேஷ் அணிகள் இடம்பெறுகின்ற நிலையில , ‘பி’ பிரிவில் இந்தியா ,தென்னாபிரிக்கா , இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடம்பெறுகின்றன. இந்த போட்டித்தொடரின்…

Read More