வெற்றியாளர் கிண்ண கிரிக்கட் தொடர்: முழு விபரம் இதோ!

(UDHAYAM, COLOMBO) – இங்கிலாந்தின் இலண்டன் ஒவல் , எட்க்பாஸ்டன் மற்றும் கார்டிஃப் மைதானங்களில் இடம்பெறவுள்ள வெற்றியாளர் கிண்ண கிரிக்கட் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணியினர் இம்மாதம் 18ம் திகதி கென்ட் மாநிலத்தை நோக்கி புறப்படவுள்ளனர்.

இந்த ஒருநாள் போட்டித் தொடரில் ‘ஏ’ பிரிவில் அவுஸ்திரேலியா , நியூசிலாந்து , இங்கிலாந்து மற்றும் பங்காளதேஷ் அணிகள் இடம்பெறுகின்ற நிலையில , ‘பி’ பிரிவில் இந்தியா ,தென்னாபிரிக்கா , இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடம்பெறுகின்றன.

இந்த போட்டித்தொடரின் முதல் போட்டில் ஜூன் மாதம் முதலாம் திகதி  இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் இடம்பெறவுள்ளது.

ஜூன் மாதம் முதலாம் திகதி தொடக்கம் 12ம் திகதி வரை நாள் தோறும் போட்டிகள் இடம்பெறவுள்ளன.

அரையிறுதி போட்டிகள் 14ம் மற்றும் 15ம் திகதிகளில் இடம்பெறவுள்ளன.

18ம் திகதி இறுதிப் போட்டி இடம்பெறவுள்ள நிலையில் , 19ம் திகதி கூடுதல் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெற்றியாளர் கிண்ண போட்டிகள்…

ஜூன் 1 – இங்கிலாந்து – பங்களாதேஷ் – ஓவல்

ஜூன் 2 – நியூசிலாந்து – அவுஸ்திரேலியா – எட்க்பாஸ்டன்

ஜூன் 3 – இலங்கை – தென் ஆப்பிரிக்கா – ஓவல்

ஜூன் 4 – இந்தியா – பாக்கிஸ்தான் – எட்க்பாஸ்டன்

ஜூன் 5 – அவுஸ்திரேலியா – பங்களாதேஷ்- ஓவல் 1.30 மணிக்கு

ஜூன் 6 – இங்கிலாந்து – நியூசிலாந்து – கார்டிஃப்

ஜூன் 7 – பாக்கிஸ்தான் – தென் ஆப்ரிக்கா – மதியம் 1.30 மணிக்கு கார்டிஃப்

ஜூன் 8 – இந்தியா – இலங்கை – ஓவல்

ஜூன் 9 – நியூசிலாந்து – பங்களாதேஷ் – கார்டிஃப்

ஜூன் 10 – இங்கிலாந்து – அவுஸ்திரேலியா – எட்க்பாஸ்டன்

ஜூன் 11 – இந்தியா – தென் ஆப்ரிக்கா – ஓவல்

ஜூன் 12 – இலங்கை – பாக்கிஸ்தான் – கார்டிஃப்

ஜூன் 14 – முதல் அரையிறுதிப் போட்டி – கார்டிஃப்

ஜூன் 15 – இரண்டாவது அரையிறுதிப் போட்டி – எட்க்பாஸ்டன்

ஜூன் 18 – இறுதிப் போட்டி – ஓவல், லண்டன்

கூடுதல் தினமானது ஜூன் 19

 

COMMENTS

Wordpress (0)
Disqus ( )