பிரதமர் நாடு திரும்பினார்

(UDHAYAM, COLOMBO) – சீனாவிற்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை நாடு திரும்பியுள்ளார்.

இன்று அதிகாலை 5.30 மணியளவில் சிறிலங்கன் விமானச் சேவைக்கு சொந்தமான U L – 142  என்ற விமானத்தில் பிரதமர் நாடு திரும்பியதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

சீனாவின் தலைநகர் பீஜிங்கில் இடம்பெற்ற “ஒரே பாதை ஒரு இலக்கு” என்ற சர்வதேச ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காகவே அண்மையில் பிரதமர் சீனா சென்றிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *