ஈ-உள்ளுராட்சிமன்ற வேலைத்திட்டம் இன்று ஆரம்பம்

(UTV|COLOMBO)-அனைத்து சேவைகளையும் பொதுமக்கள் இணையத்தளத்தின் ஊடாக மேற்கொள்வதற்கான ஈ-உள்ளுராட்சி மன்ற வேலைத்திட்டம் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பங்களிப்புடனும் ஆரம்பிக்கப்படவுள்ளது. கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் அமைச்சர்களான பைசர் முஸ்தபா, ஹரீன் பெர்னாண்டோ உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர். ஈ-உள்ளுராட்சி மன்ற வேலைத்திட்டம் நாடு முழுவதிலும் உள்ள உள்ளுராட்சி மன்ற நிறுவனங்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. முதல் கட்டத்தின் கீழ் இன்று திங்கட்கிழமை, 30 உள்ளுராட்சி மன்ற…

Read More

ஆசிரியர்களுக்கு தொலைத்தொடர்பாடல் ஊடக கற்கை நெறி வேலைத்திட்டம்

(UTV|COLOMBO)-பாடசாலை ஆசிரியர், ஆசிரியைகளுக்கு தொலைத்தொடர்பாடல் மற்றும் ஊடக கற்கை பற்றிய விளக்கம் அளிக்கும் வேலைத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்குரிய முதல் செயலமர்வு இன்று மாத்தறையில் இடம்பெறும். தென் மாகாண பாடசாலைகளில் ஊடக பாடத்தை போதிக்கும் ஆசிரியர், ஆசிரியைகள் செயலமர்வில் கலந்து கொள்வார்கள்.   இதனை இலங்கை பத்திரிகை பேரவை ஒழுங்கு செய்துள்ளது. பல்கலைக்கழக விரிவுரையாளர்களும், பேராசிரியர்களும் கலந்து கொண்டு விரிவுரையாற்றுவார்கள். இதன் அங்குரார்ப்பண நிகழ்வில் அமைச்சர் மங்கள சமரவீர பிரதம அதிதியாக கலந்து கொள்வார்.    …

Read More

அனைத்து ஊடகங்களும் ஒன்றிணைந்து டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

(UDHAYAM, COLOMBO) – டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தை அரச தனியார் ஊடகங்கள் ஒன்றிணைந்து முன்னெடுக்கவுள்ளன. நிதி மற்றும் ஊடக அமைச்சு, அரச தகவல் திணைக்களம், சகல ஊடக நிறுவனங்கள், கையடக்க தொலைபேசி நிறுவனங்கள். சுகாதார அமைச்சு ஆகியன இணைந்து டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளவுள்ளன. இதன் முதலாவது செயல்திட்டம் இன்று காலை 9 மணி முதல் 11 மணிவரை நடைமுறைப்படுத்தப்படும். இந்த நேரத்தில் சகல அரச தனியார் ஊடகங்களும் டெங்கு நோய் தொடர்பான…

Read More

நாளை முதல் விசேட டெங்கு வேலைத்திட்டம்

(UDHAYAM, COLOMBO) – டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்காக நாளை முதல் இரண்டு வார காலத்திற்கு பொது மக்களின் பங்களிப்புடன் விசேட வேலைத் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த சுகாதார அமைச்சு தயாராகியுள்ளது. மழையுடன் கூடிய காலநிலையில் டெங்கை கட்டுப்படுத்துவது இதன் நோக்கமாகும். இதுவரை 70 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் இனம் காணப்படடுள்ளனர். அவர்களில் 25 சதவீதமானோர் 19 வயதுக்கு கீழானவர்கள் என்று டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

Read More

டெங்கு நுளம்பை கட்டுப்படுத்த நாளை தொடக்கம் முன்னெடுக்கப்படவுள்ள விசேட வேலைத்திட்டம்!

(UDHAYAM, COLOMBO) – டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் நாளை தொடக்கம் இரண்டு வார காலத்தை சுத்தப்படுத்தும் வாரமாக பிரகடனப்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனையின் பேரில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த அமைச்சு அறிக்கையொன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது. நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக அதிகரிக்கக்கூடும் டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்த இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்காக சிவில் பாதுகாப்பு படையினர் நூறு பேர் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Read More

சார்க் நாடுகளின் பொருளாதாரத்தை மேம்படுத்த புதிய வேலைத்திட்டம்

(UDHAYAM, COLOMBO) – சார்க் நாடுகளின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான புதிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தெற்காசிய பிராந்திய நாடுகள் நிதி வலயமைப்பு இதனை முன்னெடுக்கிறது. இலங்கை மத்திய வங்கியின் பரிசோதனை ஆய்வு திணைக்களத்தின் இரண்டு அதிகாரிகளும் இதற்காக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

Read More

கிரீடா சக்தி வேலைத்திட்டம்

(UDHAYAM, COLOMBO) – கிரீடா சக்தி வேலைத்திட்டத்தின் கீழ் வவுணதீவு பிரதேசத்தில் விளையாட்டு வீர வீராங்கனைகளின் தேகாரோக்கிய மேம்பாட்டிற்கென கொடுப்பனவு வழங்கும் ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது. மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலகத்தில் ஆரம்பமான இந்த நிகழ்வு பிரதேச செயலாளர் s.சுதாகரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. விளையாட்டுக்களில் திறமை வாய்ந்த பாடசாலை மற்றும் ஏனைய விளையாட்டு வீர வீராங்கனைகள் உடல் ஆரோக்கியம் மற்றும் போசனை மட்டத்தை உயர்த்தும் நோக்குடன் இந்த கொடுப்பனவு மாதந்தோறும் விளையாட்டு அமைச்சினால் வழங்கப்படுகின்றது. இதன் போது…

Read More

வடக்கில் கடற்றொழில் துறையை மேம்படுத்த முறையான வேலைத்திட்டம்

(UDHAYAM, COLOMBO) – வடக்கு பிரதேசத்தில் கடற்றொழில் துறையை மேம்படுத்த முறையான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சரும் மகாவலி இராஜாங்க அமைச்சருமான மகிந்த அமரவீர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையில் நாட்டின் பாரிய மீன்பிடித்துறைமுகம் பருத்தித்துறையில் அமைக்கப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார் ஆசிய அபிவிருத்தி வங்கி இதற்கான நிதியுதவியினை வழங்கி வருகின்றது. இது தொடர்பாக மொறட்டுவ பல்கலைக்கழகம் மேற்கொண்ட சாத்தியவள அறிக்கை தற்போது கிடைக்கப்பெற்றுள்ளது என்று அமைச்சர் கூறினார். பேசாலையிலும் மீன்பிடித்துறைமுகம் அமைக்கப்படவுள்ளது. 20…

Read More

பாதிக்கப்பட்ட பிரதேச கழிவுகளை அகற்ற முறையான வேலைத்திட்டம் –ஜனாதிபதி

(UDHAYAM, COLOMBO) – அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் கழிவுகளை அகற்றுவதற்கு முறையான வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் கழிவு முகாமைத்துவத்தை முறைப்படுத்தல் தொடர்பாக இன்று (06) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். கழிவு முகாமைத்துவம் தொடர்பான புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தி கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள கழிவு முகாமைத்துவ செயற்திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி இதன்போது…

Read More