அஷ்ரப் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணம் 2017

(UDHAYAM, COLOMBO) – சாய்ந்தமருது டஸ்கர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் 5ஆவ­து ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ண இறுதிப்போட்டியில் நகரத்திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் ஏ.எல். அப்துல் மஜீத் தலைமையில் நடைபெற்ற இரவுநேர மின்னொளி மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருது பௌசி ஐக்கிய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இறுதிப்போட்டியில் வெற்றிபெற்ற நிந்தவூர் றியல் இம்ரான்…

Read More

ஜெட் ஸ்கி சாம்பியன்ஷிப் போட்டி – 2017

(UDHAYAM, COLOMBO) – இலங்கை கடற்படையினரால் நடத்தப்பட்ட கடற்படை கிண்ண 2017 இற்கான ‘ஜெட் ஸ்கி சாம்பியன்ஷிப் போட்டி கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேயகுணரத்ன தலைமையில்வெற்றிகரமாக நடைபெற்றது. நுவரெலியா மாநகர சபையுடன் இணைந்து நுவரலியா கிரகோரி வாவியில் நேற்று முன்தினம் இந்த போட்டி இடம்பெற்றது. குறித்த போட்டி மலைநாட்டின் பிரசித்தமான ‘வசந்த உதணய’ எனும் பருவ காலத்தினை முன்னிட்டு கடற்படையினரால் நான்காவது தடவையாக நடத்தப்பட்டது. சாய்வு மற்றும் இழுவை ஆகிய இரு பிரிவுகளின் கீழ்…

Read More

2017 தேசிய விருது வழங்கல் விழா, ஜனாதிபதி தலைமையில்

(UDHAYAM, COLOMBO) – 2017 தேசிய விருது வழங்கல் விழா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று தாமரை தடாக கலையரங்கில் இடம்பெற்றுள்ளது. விருது வழங்கலின் போது நாட்டுக்காக சிறந்த சேவையாற்றிய 89 பேருக்கு ஜனாதிபதியினால் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்போது இலங்கையின் அதி உயர் விருது, மறைந்த கலாநிதி பண்டிதர் அமரதேவவிற்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் தேபந்து விருது 9 பேருக்கும், வித்யாஜோதி விருது 11 பேருக்கும், தேசிய விருது வழங்கல் விழாவில் வழங்கப்பட்டுள்ளன.

Read More

பில்ட் ஸ்ரீலங்கா 2017 கண்காட்சி

(UDHAYAM, COLOMBO) – பில்ட் ஸ்ரீலங்கா 2017 (Build SL 2017 )என்ற வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை கண்காட்சி கொழும்பு பண்டரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இலங்கை கட்டட நிர்மாண கைத்தொழில் சபை ஏற்பாடு செய்துள்ள இந்த கண்காட்சி மே மாதம் 26ம் 27ம் 28ம் திகதி வரை மூன்று நாட்களுக்கு இடம்பெறவுள்ளது. 3வது முறையாக நடைபெறவுள்ள இந்த கண்காட்சியில் வீடு மற்றும் கட்டட நிர்மாணத்துறைக்கு உட்பட்ட சுமார் 300 நிறுவனங்கள் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

ஆப்கானிஸ்தான் , சிம்பாப்வே ஒருநாள் போட்டியில் மழை குறுக்கீடு!

(UDHAYAM, COLOMBO) – ஆப்கானிஸ்தான் மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த போட்டி சிம்பாப்வேயின் ஹராரேயின் மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பாட்டத்தை தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் நிறைவில் ஒன்பது விக்கட்டுக்களை இழந்து 259 ஓட்டங்களை பெற்றது.

Read More

இறுதி 20/20 போட்டியின் இலங்கை அணி விபரம் இதோ!

(UDHAYAM, COLOMBO) – அவுஸ்திரேலியா அணிக்கெதிரான மூன்றாவது இருபதுக்கு போட்டியில் நாயண சுழற்சியில் வெற்றி பெற்றுள்ள இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்துள்ளது. அவுஸ்திரேலியா அடிலெய்ட் மைதானத்தில் இந்த போட்டி இடம்பெறுகின்றது. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் இரு அணி வீரர்களினதும் பெயர் விபரங்கள் இதோ.   Sri Lankan Team W.U. Tharanga E.M.D.Y. Munaweera B.K.G. Mendis D.A.S. Gunarathne M.D. Shanaka T.A.M. Siriwardena C.K. Kapugedara Prasanna K.M.D.N. Kulasekara S.L….

Read More