4,874 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

(UTV | கொழும்பு) – முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 44 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் தற்போது 4,874 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனரென இராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் இன்றைய தினம் (12) வரை 12, 856 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து, வீடுகளுக்குச் சென்றுள்ளனரென, இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மேலும் 271 பேர்,  பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் இன்றைய தினத்துக்குள் இவர்களையும் வீடுகளுக்கு அனுப்ப முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.  

Read More

4,130 பட்டதாரிகளுக்கான நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு இன்று

(UTV|COLOMBO)-அரச சேவைக்கு 4,130 பட்டதாரிகள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு இன்று(20) பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகிறது. 2015ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டி சமூக பொருளாதார மற்றும் கலாசார ரீதியில் பல வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளது. தற்போது அதன் பயன்களை மக்கள் பெற்று வருகின்றனர். பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக் கொள்வதும் இந்த வேலைத்திட்டத்தின் ஒரு நடவடிக்கையாகும்.     [alert…

Read More