விபத்தின் காரணமாக 8 பேர் உயிரிழக்கும் சோகம்
(UDHAYAM, COLOMBO) – இலங்கையில் நாளாந்தம் விபத்தின் காரணமாக 8 பேர் உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேராதனை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சமத் தர்மரத்னவின் பகுப்பாய்வில் இந்த தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. 10 நிமிடங்களுக்கு ஒரு விபத்து இடம்பெறுவதுடன், இந்த காலப்பகுதியிலேயே 2 அல்லது 3 பேர் காயமடைகின்றனர். உரிய சாரதி சான்று இல்லாமல் வாகனத்தை செலுத்துவது மற்றும் போதையுடன் வாகனத்தை செலுத்துதல் போன்றவையே விபத்துக்களுக்கான முக்கிய காரணங்களாக உள்ளன. இதற்கான அபராதத்தை தொகை அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.