அனைத்துக் கட்சிகளின் இணக்கப்பாட்டுடன் அரசியல் தீர்வை வழங்கும் சாத்தியம் – பிரதமர்
(UDHAYAM, COLOMBO) – இரண்டு பிரதான கட்சிகள் மற்றும் ஏனைய கட்சிகளின் இணக்கப்பாட்டுடன் அரசியல் தீர்வை வழங்கும் சாத்தியம் இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து ஒரே இலங்கையை உருவாக்குவதே நாட்டின் பெரும்பாலான மக்களின் விருப்பமாகுமென்றும் பிரதமர் கூறினார். அமரர் விஜயகுமாரதுங்கவின் 29வது நினைவு தின வைபவத்தில் கலந்து கொண்டு பிரதமர் உரையாற்றினார். கொழும்பு பிஷப் கல்லூரி அரங்கில் விஜயகுமார மன்றம் இந்த வைபவத்தை நேற்று ஏற்பாடு செய்திருந்தது. பெரும்பாலான மக்களின்…