இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேறுங்கள்’ – இந்தியர் ஒருவர் அமெரிக்காவில் படுகொலை
(UDHAYAM, COLOMBO) – இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேறுங்கள்’ என்ற கோசத்துடன், இந்தியர் ஒருவர் அமெரிக்காவில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் கன்சாஸ் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் இந்த கொலை இடம்பெற்றுள்ளது. ஐதராபாத்தைச் சேர்ந்த 32 வயதான சிறினிவாஸ் குசிபோட்லா என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் மீது துப்பாக்கித் தாக்குதலை நடத்தியவர் அடம் புரின்டோன் என்ற 51 வயதான முன்னாள் கடற்படை அதிகாரி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.