பொதுமக்கள் மீது ஐ.எஸ் தீவிரவாதிகள் பாரிய தாக்குதல்!
(UDHAYAM, COLOMBO) – ஈராக்கின் மேற்கு மோசூலில் மோதல் இடம்பெறும் பிரதேசத்தில் இருந்து வெளியேறும் மக்கள் மீது ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் பாரிய தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இதன் காரணமாக பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 64 பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக மனித உரிமை கண்காணிப்பு அமைப்பொன்று தெரிவித்துள்ளது. ரிக்ரிஸ் ஆற்றை கடந்து பாதுகாப்பான பிரதேசங்களை நோக்கி பொது மக்கள் செல்லும் வேளையிலேயே இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம், மோசூலை மீள…