UNP சிறிகொத தலைமையகத்தின் யானை மீது துப்பாக்கிச் சூடு – காவற்துறை அதிகாரியொருவர் கைது
புறக்கோட்டையில் அமைந்துள்ள சிறிகொத ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகத்தில் உள்ள யானை சின்னத்தின் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொண்ட காவற்துறை அதிகாரியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த காவற்துறை அதிகாரி சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் செயலாளரின் புறக்கோட்டையில் எபிடமுல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள வீட்டில் கடமையில் ஈடுபட்டுள்ள நபர் என தெரிவிக்கப்படுகிறது. இன்று மதியம் உந்துருளியில் வந்த குறித்த காவற்துறை அதிகாரி அவருக்கு கடமைக்காக வழங்கப்பட்டுள்ள துப்பாக்கியால் இந்த துப்பாக்கி பிரயோகத்ததை மேற்கொண்டுள்ளார். பின்னர் , வழமையைப் போல குறித்த செயலாளரின்…