News Editor Team

தேர்தலை பிற்போட வேண்டும் என்பதே எனது கருத்து – சி. வி. விக்னேஸ்வரன்

(UTV | கொழும்பு) – தேர்தலை பிற்போட வேண்டும் என்பதே எனது கருத்து என பாராளுமன்ற உறுப்பினர் சி. வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். இன்று (04) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தேசிய அரசாங்கம் அமைப்பது நாட்டுக்கு நல்லது ஆனால் தமிழ் கட்சிகள் தேசிய அரசாங்கத்தில் இணைவது பொருத்தமானதல்ல, தமிழ் மக்களின் பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கக்கூடிய தேசிய அரசாங்கத்தை தமிழ் கட்சிகள் ஒன்றிணைக்க வேண்டும் என்பதை…

Read More

இலங்கை மற்றும் பூட்டானுக்கான இஸ்ரேலிய தூதுவர் ஜனாதிபதியை சந்தித்தார்.

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இந்தியா, இலங்கை மற்றும் பூட்டானுக்கான இஸ்ரேல் தூதுவர் நோர் கிலோன்(Naor Gilon) ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (04) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, இஸ்ரேல் கொன்சியூலர் தினேஷ் ரொட்ரிகோ ஆகியோர் கலந்துகொண்டனர். BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Read More

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விலை குறைப்பு.

(UTV | கொழும்பு) – அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விலைக் குறைப்பானது இன்று (04) வியாழக்கிழமை முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு கிலோ உருளை கிழங்கு 215 ரூபாவாகவும், ஒரு கிலோ பருப்பு 282 ரூபாவாகவும், ஒரு கிலோ வெள்ளை சீனி 269 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளன. BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Read More

இன்று முதல் நவீன யுக்திகளுடன் சுற்றிவளைப்பு.

(UTV | கொழும்பு) – யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் புதிய பரிணாமத்துடன் இன்று (04) முதல் மீண்டும் முன்னெடுக்கப்படுகின்றது. நவீன யுக்திகளுடன் இந்த சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர், சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். போதைப்பொருளுக்கு அடிமையானர்களுக்கான புனர்வாழ்விற்காக பல்வேறு செயற்றிட்டங்களை ஆரம்பிக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதன்கீழ், குருணாகல் – கல்வல பிரதேசத்தில் இன்று(04) விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. இதன்போது போதைப்பொருட்களுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். BE INFORMED…

Read More

ஜே.ஆரின் பேரன் ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்து கொண்டார்.

(UTV | கொழும்பு) – இந்நாட்டின் முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தனவின் பேரனான பிரதீப் ஜயவர்தன எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் அரசியல் பயணத்திற்கு தனது ஆதரவை நல்கும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்து கொண்டார். ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்ட பிரதீப் ஜயவர்தனவை ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட அமைப்பாளராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நியமித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொழும்பு கிழக்கு தேர்தல் தொகுதி…

Read More

அரச சொத்துக்களை விற்பது எமது கொள்கை அல்ல – நாமல் ராஜபக்ஷ.

(UTV | கொழும்பு) – அரச சொத்துக்களை விற்பதாயின் அதனை கொள்வனவு செய்வதற்கு முன்வரும் நிறுவனங்கள் அல்லது நபர்கள் தொடர்பிலும் அவர்களுக்கு குறித்த அரச நிறுவனங்களை வழங்குவது தொடர்பில் ஆராயப்பட்ட தீர்மானங்கள் என்ன என்பது குறித்தும் நாட்டிற்கு வெளிப்படுத்துமாறு பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். குறிப்பாக மத்தல விமான நிலையம் , ஹில்டன் ஹோட்டல் என்பவற்றை இவ்வாறு மறுசீரமைப்பதாயின் அதில் முதலீடு செய்வதற்கு வருகை தந்துள்ளவர்களுக்கு அதனை வழங்கும் போது பின்பற்றிய செயன்முறைகள்…

Read More

விமானம் மூலம் யாழிற்கு எடுத்து வரப்பட்ட சம்பந்தனின் பூதவுடல்.

(UTV | கொழும்பு) – இலங்கையின் மூத்த அரசியல் வாதி இராஜவரோதயம் சம்பந்தனது பூதவுடல் கொழும்பில் இருந்து விமானம் மூலம் யாழ்ப்பாணத்திற்கு எடுத்து வரப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் தந்தை செல்வா கலையரங்கில் இன்று (04) காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை மறைந்த சம்பந்தனின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்த முடியும் கட்சியினர் அறிவித்துள்ளனர். சம்பந்தனின் இறுதிக்கிரியை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (07) திருகோணமலையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன்…

Read More

சிலாபம் – கொழும்பு வீதியில் கோர விபத்து – 25 பேர் வைத்தியசாலையில்.

(UTV | கொழும்பு) – சிலாபம் – கொழும்பு வீதியில் மாதம்ப, கலஹிடியாவ பிரதேசத்தில் அரச பேருந்து ஒன்றும் சீமெந்து ஏற்றப்பட்ட லொறியும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. விபத்தில் சுமார் 25 பேர் காயமடைந்து சிலாபம் பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேவாலய சந்தியில் இருந்து சிலாபம் ஊடாக கொழும்பு நோக்கி பயணித்த அரசு பேருந்து ஒன்று வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல்…

Read More

முரல் மீன் குத்தியதில் 29 வயதான மீனவர் உயிரிழப்பு.

(UTV | கொழும்பு) – யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் இருந்து மீன் பிடிக்க சென்ற மீனவர் ஒருவர் முரல் மீன் குத்தி மரணமடைந்துள்ளார். இந்த சம்பவம் 01 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் குருநகரைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 29 வயதான மைக்கேல் கொலின் டினோ என தெரியவருகின்றது. உயிரிழந்தவரின் சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். BE INFORMED WHEREVER…

Read More

உணவு பாத்திரத்தில் தவறி விழுந்த 9 வயதுடைய பாடசாலை மாணவி பலி – பாணந்துறையில் சோகம்.

(UTV | கொழும்பு) – சாப்பாட்டு தன்சலுக்காக சமைக்கப்பட்ட பெரிய உணவு பாத்திரம் ஒன்றில் தவறி விழுந்து, கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த 9 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த மாணவி நேற்று (02) உயிரிழந்துள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர். பாணந்துறை பெக்கேகம பகுதியைச் சேர்ந்த ஷயனி மெதும்சா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பொசன் போயவை முன்னிட்டு பாணந்துறையில் கடந்த 23 ஆம்…

Read More