News Editor Team

பெண்களின் லட்சியங்களுக்கு எல்லை இருக்கக்கூடாது – ரேச்சல் ரீவ்ஸ்.

பிரிட்டன் பாராளுமன்றத் தேர்தலில் இடதுசாரி கட்சியான தொழிலாளர் கட்சி மொத்தமுள்ள 650 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு தேவையான 326 இடங்களையும் தாண்டி 408 இடங்களில் வெற்றி பெற்று, 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. மொத்தமுள்ள 650 இடங்களில் தொழிலாளர் கட்சி 410 இடங்களிலும், ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி 119 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. பிற கட்சிகள் 112 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. அதிகார மாற்றம் காரணமாக தொழிலாளர் கட்சியின் 61 வயதான கெய்ர் ஸ்டார்மர்…

Read More

வடக்கு, கிழக்கு மாகாணங்களை மையப்படுத்தி சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை நடத்துவோம் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித்.

போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல மனித உயிர்கள் பலியாகியுள்ளன. யுத்தத்தின் பின்னர் இம்மாவட்டங்கள் அபிவிருத்தியின் விடியலை காணவில்லை. ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை விரிவுபடுத்தி, இதுவரை எந்த தலைவர்களும் தலைமைத்துவம் வழங்காத சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை நடத்த நாம் நடவடிக்கை எடுப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 297 ஆவது கட்டமாக 1,177,000 இலட்சம்…

Read More

பிரித்தானிய பொதுத் தேர்தலில் 22 வயது இளைஞர் சாம் வெற்றி.

சமீபத்தில் நடந்து முடிந்த பிரிட்டன் (uk) பொதுத் தேர்தலில் 22 வயது இளைஞர் ஒருவர் நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தொழிலாளர் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி தேர்தலில் வெற்றி பெற்ற சாம் கார்லின் (Sam Carling) “நாடாளுமன்றத்தின் குழந்தை” என்று அழைக்கப்படுவார் என விமர்சகர்கள் கூறுகின்றனர். வடமேற்கு கேம்பிரிட்ஜ்ஷயர் தொகுதியில் 39 வாக்குகள் அதிகம் பெற்று இவர் வெற்றி பெற்றார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பட்டதாரியான சாம், சுமார் 22 ஆண்டுகள் எம்.பி.யாக பணியாற்றிய ஷைலேஷ் வராவை தோற்கடித்தார். தனது வெற்றியை “அரசியல்…

Read More

நாளை சுகயீன விடுமுறை போராட்டம்.

இலங்கையின் ஆசிரியர்கள் அதிபர்களுக்கு எழுத்து மூலம் வாக்குறுதியளிக்கப்பட்டிருந்த சம்பள முரண்பாட்டுத் தீர்வின்படி இன்னும் இரண்டு பகுதி வழங்கப்படாமையை சுட்டிக்காட்டி அதனை பெறுவதற்காக பல்வேறு போராட்டங்கள் செய்தும் பலனில்லாத நிலையில் எமது ஆசிரியர் அதிபர் தொழிற்சங்கக் கூட்டணி நாளை செவ்வாய்கிழமை (09) சுகயீன லீவு போராட்டத்தில் குதிக்கவுள்ளது என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் ஏ.ஆதம்பாவா தெரிவித்தார். இது தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கம் அளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது அல்-கமரூன் வித்தியாலயத்தில் இன்று (08)…

Read More

போராட்டங்கள் மூலம் மக்களின் நிம்மதியான வாழ்க்கை நிலையை சீர்குலைப்பது தான் நோக்கமா ?

தேர்தல் நெருங்கும் நேரத்தில் அநீதியான வகையில் வேலைநிறுத்தங்களை முன்னெடுப்பதன் மூலம் பிள்ளைகள் கல்வி கற்கும் வாய்ப்பை இழந்துள்ளனர் என தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார். இந்த வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்கள் மூலம் மக்களின் நிம்மதியான வாழ்க்கை நிலையை சீர்குலைப்பது தான் நோக்கமா என்ற கேள்விக்கு எதிர்க்கட்சிகள் பதில் அளிக்க வேண்டும் என்றும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத்…

Read More

இதுவரையில் கவனம் செலுத்தாத 14 துறைகளுக்கு வரி அறவீடு.

இதுவரையில் கவனம் செலுத்தாத 14 துறைகள் தொடர்பில் அவதானம் செலுத்தி அவற்றிலிருந்து வரி அறவீடு செய்யவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். கேகாலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். வரியை செலுத்தாமல் இருக்க எவருக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை எனவும், வரி செலுத்துவதில் விசேட கவனம் செலுத்தப்பட்ட காலம் இதுபோன்று இதுவரை இருந்ததில்லை எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். “கடந்த ஆண்டு, 14 துறைகள் வரி செலுத்துவதற்காக…

Read More

கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

நாளைய தினம் பாடசாலை கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் கல்வியமைச்சு அறிவித்தலொன்றை விடுத்துள்ளது. இதற்கமைய நாளைய தினம் வழமைப் போன்று அரச பாடசாலைகள் இயங்குமென கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. நாளைய தினம் ஆசிரியர்கள் சுகயீன விடுமுறையில் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். இதன்காரணமாகவே கல்வியமைச்சு இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.

Read More

டிஜிட்டலுக்கு மாறும் பயணச் சீட்டுகளுக்கான விநியோக முறை.

இந்த வருட இறுதிக்குள் ரயில்கள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து சேவைகளில் பயணச்சீட்டுக்குப் பதிலாக இலத்திரனியல் முறைமை அறிமுகப்படுத்தப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் கங்கநாத் ரூபசிங்க தெரிவித்தார். ”இரண்டு வருட முன்னேற்றமும் எதிர்காலமும்” என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (08) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டபோதே போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் கங்கநாத் ரூபசிங்க இதனைக் குறிப்பிட்டார். பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் 2022 ஆம் ஆண்டுக்கு…

Read More

அரசு ஊழியர்கள் கோரும் சம்பள உயர்வை வழங்க முடியாது.

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் கோரும் சம்பள உயர்வை வழங்கினால், தற்போதுள்ள 18% வெட் வரியை 20% முதல் 21% வரை உயர்த்த நேரிடும் எனவும் பொதுமக்களை நசுக்கி  இதுபோன்ற கோரிக்கையை அரசாங்கத்தினால் நிறைவேற்ற முடியாது எனவும் திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவித்தார். அரச சேவை தொழிற்சங்கங்கள் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (08) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இதனைத் தெரிவித்தார். தற்போதுள்ள வரவு செலவுத்…

Read More

வெளியேறிச் சென்றார் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் அத்தியட்சகர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா வைத்தியசாலை விடுதியில் இருந்து வெளியேறிச் சென்றார். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் அத்தியட்சகர் பதவியில் இருந்து வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை இடமாற்றும் முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வைத்தியசாலை முன்பாக நேற்று (07) இரவு ஆரம்பித்த கண்டன ஆர்ப்பாட்டம் அதிகளவிலான மக்களின் பங்கேற்புடன் தொடர்ச்சியாக இன்று (08) நடைபெற்ற நிலையில் வைத்திய அத்தியட்சகர் வெளியேறினார். இதனையடுத்து சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை முன்பாக நடைபெற்ற போராட்டமும் நிறைவுக்கு வந்தது….

Read More