News Editor Team

உரிய திகதியில் தேர்தலை நடத்த வேண்டும் – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு

(UTV | கொழும்பு) – உரிய திகதியில் தேர்தலை நடத்த வேண்டும் எனவும், அதற்காக தேர்தல்கள் ஆணையாளருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் விடயங்களை விளக்கியதாகவும், இலங்கை ராமன்ய நிகாயவின் மகாநாயக்க வண. மகுலேவே விமல நாயக்க தேரரிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நாரஹேன்பிட்டி, எல்விடிகல வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா ராமன்ய மகா நிகாயவின் தலைமையகத்திற்கு நேற்று (05) பிற்பகல் விஜயம் செய்த ஜனாதிபதி, இலங்கை ராமன்ய மகா நிகாயவின் மகாநாயக்க வண. மகுலேவே விமல மகாநாயக்க தேரரைச்…

Read More

முன்னாள் ஆட்சியாளர்கள் நாட்டை அபிவிருத்தி செய்வதாக தெரிவித்து மக்களை ஏமாற்றியே வந்தனர் – சஜித்

(UTV | கொழும்பு) – கடந்த காலங்களில் நாட்டை அபிவிருத்தி செய்வதாக கூறி பலர் பெரிதாக பேசிக் கொண்டாலும், மக்களை ஏமாற்றும் நடவடிக்கையையே அவர்கள் செய்து வந்தனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். விவசாயத்தில் ஈடுபடும் மக்களுக்கு ஸமார்ட் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தேவையான தொழில்நுட்ப அறிவு மற்றும் உபகரணங்கள் வழங்கப்படும். பால் பண்ணையாளரின் கால்நடை வளத்திற்கு தேவையான மேய்ச்சல் தரை இதுவரை பெற்றுக்கொடுக்கப்படவில்லை. இதற்கான மேய்ச்சல் தரை வழங்கப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர்…

Read More

O/L பரீட்சை தொடர்பான விசேட அறிவித்தல்.

(UTV | கொழும்பு) – 2023 (2024) கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையின் அழகியல் பாடத்துடன் தொடர்புடைய செயன்முறைப் பரீட்சைகள் 09.07.2024 முதல் 19.07.2024 வரை நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதில் 169,007 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர். அழகியல் பாடத்தின் இறுதிப் பெறுபேறுகளை நிர்ணயம் செய்வதற்கு எழுத்து மூல பரீட்சை மற்றும் செயன்முறைப் பரீட்சை ஆகிய இரண்டிலும் பெறப்பட்ட மதிப்பெண்கள் பயன்படுத்தப்படுவதால் இதில் தோற்றுவது கட்டாயம் என பரீட்சை திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. இரண்டு பகுதிகளிலும்…

Read More

இன்று முதல் நாடு தழுவிய வேலை நிறுத்தம் – பாகிஸ்தானில் எரிபொருள் நெருக்கடி

(UTV | கொழும்பு) – பாகிஸ்தான் பெட்ரோலியம் வழங்குனர்கள் சங்கம் இன்று (05) முதல் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளது. இவர்களது பிரச்சினைகள் தொடர்பில் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடல்கள் தீர்வு இன்றி நிறைவடைந்ததை தொடர்ந்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. வேலைநிறுத்தத்தின் போது நாடு முழுவதும் உள்ள 13,000 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் செயற்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வரி காரணமாக இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. BE INFORMED…

Read More

சாகல ரத்நாயக்கவின் வாகனத் தொடரணியை வீடியோ எடுத்த இளைஞன் கைது.

(UTV | கொழும்பு) – ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி அலுவலகத்தின் பிரதானியுமான சாகல ரத்நாயக்க பயணித்த வாகனத் தொடரணியை வீடியோ எடுத்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொத்துவில் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். கொள்ளுப்பிட்டி ஏர்னஸ்ட் டி சில்வா மாவத்தை 28ஆவது வீதி சந்திக்கு அருகில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கையடக்கத் தொலைபேசியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. பொத்துவில் பிரதேசத்தில் வசிக்கும் 44…

Read More

மலேசியா விமான நிலையத்தில் வாயு கசிவு

(UTV | கொழும்பு) – மலேசியாவின் பிரதான விமான நிலையத்தில் ஏற்ப்பட்ட திடீர் வாயு கசிவினால் 39 பேர் நோய்வாய்ப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்றைய தினம் (04) இடம்பெற்றுள்ளது. விமான பொறியியல் வசதிகள் பிரிவில் இரசாயன கசிவு ஏற்ப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலுள்ள பிரதான சர்வதேச விமான நிலையத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மயக்கம் மற்றும், குமட்டல் நோய் அறிகுறிகளுக்கு பயணிகள் உள்ளாகியுள்ளனர். விமான நிலையத்திலுள்ள வளி அனர்த்த பிரிவுக்கு 14 நோயாளர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்….

Read More

அக்குறணை தீ கட்டுப்பாட்டுக்குள் – பல கோடி ரூபா பெறுமதியான உடைமைகள் சேதம் – மாத்தளை – கண்டி வீதி மீண்டும் திறப்பு

(UTV | கொழும்பு) – அக்குறணை நகரத்திலுள்ள பிரபல மும்மாடிக் கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட தீ தற்போது முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆயினும் குறித்த கட்டடம் தீயினால் முற்றாக சேதமடைந்துள்ளது. இன்று (05) வௌ்ளிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ காரணமாக அக்குறணை A9 வீதியில் அமைந்துள்ள மேற்படி கட்டடம் முற்றாகச் சேதமடைந்துள்ளதுடன் கண்டி மாநகர சபை தீ அணைப்புப் பிரிவினரும் பொலிசாரும், பிரதேச மக்களும் இணைந்து அருகில் உள்ள கட்டடங்களுக்கு தீ பரவுவதை கட்டுப்படுத்தினர். வௌ்ளிக்கிழமை…

Read More

லொறியொன்று வீதியின் நடுவில் கவிழ்ந்து கோர விபத்து – 4 பேர் பலி

(UTV | கொழும்பு) – பதுளை – சொரணாதோட்டை வீதியின் வெலிஹிந்த பிரதேசத்தில் இன்று (05) மதியம் 12 மணியளவில் லொறியொன்று வீதியின் நடுவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவிக்கின்றனர். மொனராகலையில் இருந்து வீதிகளில் பேருந்து தரிப்பிடங்களை அமைப்பதற்காக வந்தவர்களே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளனர் காயமடைந்தவர்கள் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Read More

ஸ்ரீ.சு கட்சியின் பொதுச் செயலாளராக கடமைகளை பொறுப்பேற்ற தயாசிறி

(UTV | கொழும்பு) – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கட்சியின் தலைமையகத்திற்கு முன்பாக தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். அவரை கட்சித் தலைமையகத்திற்குள் பிரவேசிக்க பொலிஸார் அனுமதிக்காத நிலையில் தயாசிறி ஜயசேகர இவ்வாறு கட்சித் தலைமையகத்திற்கு முன்பாக கடமைகளை பொறுப்பேற்றதாக தெரிவிக்கப்படுகிறது. BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Read More

சவுக்கு மரங்களை வெட்டிய குற்றத்தில் மூவர் கைது

(UTV | கொழும்பு) – யாழ்ப்பாணத்தில் சவுக்கு மரங்கள் வெட்டிய குற்றச்சாட்டில் வனவள பாதுகாப்பு திணைக்களத்தால் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மணற்காட்டு பகுதியில் சவுக்கு மரங்கள் பெருந்தொகையாக வெட்டப்படுவதாக வனவள பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மரங்களை வெட்டிய குற்றச்சாட்டில் மூவரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து சுமார் 25ஆயிரம் ரூபாய் பெறுமதியான வெட்டப்பட்ட சவுக்கு மரங்களை மீட்டுள்ளதுடன் துவிச்சக்கர வண்டிகளும் மீட்க்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட…

Read More