News Editor Team

ஜனாதிபதி தேர்தல் – இன்னும் முடிவில்லை – சுமந்திரன் எம்.பி

நாங்கள் யாரை ஆதரிப்போம் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் ம. ஆ. சுமந்திரன் தெரிவித்தார். இன்று (14) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று ஜனாதிபதி 13 ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பான விடயங்களை பலருடன் பேசிக்கொண்டு வருகிறார். 2022 ஆம் டிசம்பர் சகல கட்சிகளுடன் பேச்சுவார்த்தை ஆரம்பித்த போது நான் அவருக்கு வழங்கிய ஆவணத்தில் இருந்து தொடர்ச்சியாக பல ஆவணங்கள் கைமாற்றப்பட்டு இப்பொழுது…

Read More

தாய்லாந்து பிரதமர் பதவியில் இருந்து நீக்கம்

தாய்லாந்து பிரதமர் ஸ்ரேதா தவிசினை பதவியில் இருந்து நீக்கி அந்நாட்டு அரசியலமைப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்நாட்டு நீதிபதி ஒருவருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற சம்பவம் தொடர்பில் சிறைச்சாலையில் இருந்து விடுதலையான சட்டத்தரணி ஒருவர் அமைச்சரவை அமைச்சராக நியமிக்கப்பட்டமையே இதற்குக் காரணம் என வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. ஸ்ரேதா தவிசின், நெறிமுறைகள் மீதான விதிகளை தீவிர நடத்தையுடன்” மீறியதாக அரசியலமைப்பு நீதிமன்றம்,  தீர்ப்பளித்துள்ளது. 67 வயதான ஸ்ரேத்தா, ஓராண்டுக்கும் குறைவான காலமே ஆட்சியில் இருந்துள்ளதுடன், 16 ஆண்டுகளில்…

Read More

வேட்பு மனுவில் கையொப்பமிட்டார் ஜனாதிபதி

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் கையொப்பமிட்டார். இது தொடர்பான  நிகழ்வு  கொழும்பு பிளவர் வீதியிலுள்ள அவரது அரசியல் அலுவலகத்தில் இடம்பெற்றது

Read More

கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகள் நிறைவு

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்துவதற்கான நடவடிக்கைகள் இன்று (14) நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தது. இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக 40 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்துவதற்கான நடவடிக்கைகள் ஜூலை 26 ஆம் திகதி ஆரம்பமாகி இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தது.

Read More

அபாகஸ் மூலை மேம்பாட்டு திட்டம் – Grand Champion பதக்கத்தை வென்றார் கம்பளை ஸாஹிரா மாணவி நிர்ஷாட் மொஹமட் தாலியா

UCMAS இனால் ஏற்பாடு செய்யப்பட்ட உலகின் முன்னணி அபாகஸ் (Abacus) அடிப்படையிலான மூலை மேம்பாட்டு திட்டம் ஒன்று 10-08-2024 அன்று கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கில் வெற்றிகரமாக நடைபெற்றது. இதில் கம்பளை கஹடப்பிடயை சேர்ந்த ஸாஹிரா கல்லூரியின் தரம் 1ல் கல்வி பயிலும் மாணவி NIRSHAD MOHAMED THALIA அவர்கள் Grand champion பதக்கத்தை வென்றுள்ளார்.

Read More

மொட்டுவின் மற்றுமொரு எம்.பி ரணிலுக்கு ஆதரவு.

இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக நுவரெலியா மாவட்ட பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் பியதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நிமல் பியதிஸ்ஸ கடந்த தேர்தலில் பொதுஜன பெரமுனவின் கீழ் தேசிய சுதந்திர முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தி நுவரெலியா மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார். இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்திய அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய அரசியல் சூழ்நிலையை முழுமையாக ஆய்வு செய்துள்ளோம். நாட்டின் தற்போதைய நிலை குறித்து எமது கவனம் செலுத்தப்பட்டது….

Read More

நாமல் ராஜபக்ஷ வேட்பு மனுவில் கையெழுத்திட்டார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ வேட்பு மனுவில் கையொப்பமிட்டுள்ளார். விஜேராமவில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் நாமல் ராஜபக்ச வேட்பு மனுவில் கையொப்பமிட்டார். இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கிய நாமல் ராஜபக்ஷ சார்பில், கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இன்று (14) முற்பகல் கட்டுப்பணம் செலுத்தினார்.

Read More

கட்டுப்பணம் செலுத்தினார் ஜனக ரத்நாயக்க.

ஜனாதிபதி தேர்தலில் எக்சத் லங்கா பொதுஜன கட்சியின் சார்பில் ஜனக ரத்நாயக்க போட்டியிட தீர்மானித்துள்ளார். அதன்படி எக்சத் லங்கா பொதுஜன கட்சியின் செயலாளர் நிஹால் பிரேம குமார தேசப்பிரிய ஜனக ரத்நாயக்கவுக்கான கட்டுப்பணத்தை இன்று (14) செலுத்தினார். ஜனக ரத்நாயக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவராக சில காலம் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.

Read More

1700 ரூபாய் சம்பள அதிகரிப்பு – வர்த்தமானி வௌியானது!

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரிப்பது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. சம்பளக் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் எச். கே. கே. ஏ. ஜயசுந்தரவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. தேயிலைத் தோட்டத் தொழிலாளி ஒருவரின் நாளாந்த சம்பளம் 1,350 என்றும், குறித்த சம்பளம் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியக் கொடுப்பனவுகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்றும், உரிய வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக உற்பத்தித்திறன்…

Read More

விஜயதாச ராஜபக்ஷ வேட்புமனுவில் கையெழுத்திட்டார்

ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச ராஜபக்ஷ இன்று (14) காலை வேட்பு மனுவில் கையொப்பமிட்டுள்ளார். மகாசங்கத்தினரின் ஆசீர்வாதத்திற்கு மத்தியில் விஜயதாச ராஜபக்ஷ, நாவலலில் உள்ள அவரது வீட்டில் வைத்து வேட்புமனுவில் கையொப்பமிட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக, பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ அண்மையில் கட்டுப்பணத்தை செலுத்தினார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவுடன் இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் அவர் போட்டியிடவுள்ளதாக ஆரம்பத்திலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால்,…

Read More