மலேசிய துணைப் பிரதமரை சந்தித்த செந்தில் தொண்டமான்.
மலேசியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அந்நாட்டு துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் பின் ஹமிடியைச் சந்தித்தார். இருநாட்டு உறவை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடல் மேற்கொண்டார். இக்கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ சரவணன் முருகன் மற்றும் மலேசியாவுக்கான இலங்கைத் தூதுவர் ஆகியோர் உடனிருந்தனர்.