மலேசியாவின் பாதுகாப்பு அமைச்சரை சந்தித்த செந்தில் தொண்டமான்.
மலேசியாவின் பாதுகாப்பு அமைச்சர் முகமட் ஹசனை கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் சந்தித்தார். இச்சந்திப்பின் போது மலேசியாவிற்கு இலங்கைக்குமான உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது. இச்சந்திப்பின் போது பாராளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ சரவணன் முருகன் மற்றும் மலேசியாவுக்கான இலங்கைத் தூதுவர் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.