News Editor Team

ஹிருணிகாவின் மனு விசாரணை ஜூலை 15 இல்.

தற்போது சிறையில் இருக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர, தம்மை பிணையில் செல்ல அனுமதிக்குமாறு கோரி தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் 15ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இந்த மனு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, பிணை விண்ணப்பத்திற்கு எதிராக சட்டமா அதிபர் எழுத்துமூல சமர்ப்பணங்களை முன்வைத்தார். எனவே, இந்த வழக்கை ஜூலை 15 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்…

Read More

டயானா கமகேவுக்கு எதிராக இன்று வழக்கு தாக்கல்.

குடிவரவு – குடியகல்வு திணைக்களத்துக்கு போலியான தகவல்களைச் சமர்ப்பித்து வெளிநாட்டு கடவுச்சீட்டை பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் இன்று (11) வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பிணையில் உள்ள டயனகமகே, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகிய பின்னர், கொழும்பு மேலதிக நீதிவான் ஹர்ஷன கெகுலுவெல குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு ஆகஸ்ட் முதலாம் திகதி வழக்குரைஞர்களுக்கிடையில் முறைப்பாடுகளைப் பதிவு செய்து குற்றச்சாட்டுகளை வாசிக்குமாறு அறிவித்தார். பிரதம நீதிவான் இன்று…

Read More

இந்தியாவின் காத்திரமான உதவிகளுக்கு மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பாராட்டு.

இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையிலான உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் பரஸ்பர ஒத்துழைப்புக்கான வாய்ப்புக்களை ஆராய்வது தொடர்பில், மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோருக்கு இடையில் (10) இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலின்போது, கடினமான காலங்களில் இந்தியா இலங்கைக்கு செய்த உதவிகளுக்காக மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் தமது நன்றிகளை வெளிப்படுத்தினார். வடக்கு, கிழக்கு மக்களுக்கு அமைத்துக்கொடுத்த 50,௦௦௦ வீடுகள் மற்றும் மலையகத்துக்கு வழங்கிய 10,௦௦௦…

Read More

தேசிய நீர் வழங்கல் செயற்பாடுகளை டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலாமைப்பு சபையின் உள்ளக செயற்பாடுகளை டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்யை ஆரம்பித்து வைக்கப்பட்டது. மேற்படி வைபவம் பத்தரமுல்லையில் உள்ள நீர்வழங்கல் அமைச்சில் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் 09.07.2024 நடைபெற்றது. இந் நிகழ்வில் அமைச்சின் செயலாளர் ஏ.சி.எம். நபீல், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் தலைவர் நிஷாந்த ரணதுங்க மற்றும் ஜெயிக்கா நிறுவனத்தின் பிரதான பிரதிநிதி யமதா டெஸ்டிதுயா கிளைமக்ஸ் இன்டநெசனல்…

Read More

கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் “வைர விழா கேட்போர் கூட” நிர்மாண பணிக்கு அடிக்கல் நடும் நிகழ்வு.

முன்னாள் இராஜாங்க அமைச்சரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவர் சட்டத்தரணி எச். எம். முகம்மட் ஹரீஸ் அவர்களின் முயற்சியின் பயனாக பாடசாலை 75ஆம் ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் வகையில் கல்வி அமைச்சின் ஆறு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் கல்முனை கல்வி வலய கல்முனை கமு/கமு/ஸாஹிரா தேசிய பாடசாலையில் நிர்மாணிக்கப்படவுள்ள கேட்போர் கூடத்திற்கும், புதிய மூன்று மாடி வகுப்பறைக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (11) இடம்பெற்றது. கல்முனை…

Read More

பொத்துவில் பிரதேச செயலகத்தின் பதில் பிரதேச செயலாளர் கடமையேற்பு.

அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேச செயலகத்தின் பதில் பிரதேச செயலாளராக சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக் அவர்கள் 2024.07.10 ம் திகதி தமது கடமையேற்றுக் கொண்டார். அம்பாறை அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்கிரம அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் எஸ். ஜெகராஜன் உள்ளிட்ட மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் குழாம் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்வில் பொத்துவில் பிரதேச செயலக முன்னாள் பிரதேச செயலாளர் சட்டத்தரணி. பிர்னாஸ் இஸ்மாயில் அவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன்…

Read More

சட்டத்தரணி கிரிஷ்மால் வர்ணசூரிய SJB யில் இணைந்தார்.

2015 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணியின் தேசியப் பட்டியலில் வேட்பாளராகவும், 2020 பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான சட்டத்தரணி கிருஷ்மால் வர்ணசூரிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார். சட்டத்தரணி கிரிஷ்மால் வர்ணசூரிய இலங்கை, ஹேக் மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் 24 வருடங்களுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டவராவார். நாட்டின் 10…

Read More

ஆளுநர் நஸீருக்கும், அலி சப்ரி MP க்கும் பொன்னாடை போர்த்தி கௌரவிப்பு.

வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமட் அவர்களும், பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களும் புத்தளம் உப்பு உற்பத்தியாளர் நலன்புரி சங்கத்தினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர். உப்பு உற்பத்தியாளர் நலன்புரி சங்கத்தின் தலைவர் ரனீஸ் பத்ருதீன் அவர்கள் கௌரவ வடமேல் மாகாண ஆளுநருக்கும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் உப்பு உற்பத்தியாளர் சங்க தலைவர் அல்ஹாஜ் M. H. M. நவாவி அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களுக்கும் பொன்னாடை போர்த்தி…

Read More

சுற்றுலா சென்ற பேருந்து விபத்து – 37 பேர் காயம்.

நுவரெலிய டொப்பாஸ் பகுதியில் பேருந்து ஒன்று விபத்திற்குள்ளனாதில் 37 பேர் காயமடைந்துள்ளனர். இன்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சுற்றுலா சென்ற பேருந்து ஒன்றே விபத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Read More

பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்ப்பட்டுள்ளது. மின்தனாவோ தீவில் 6.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலமட்டத்திலிருந்து 630 கிலோமீற்றர் ஆழத்திற்கும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதனால் ஏற்ப்பட்ட சேதங்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை. நிலநடுக்கம் காரணமாக மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டுமென பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Read More