1,373 கிலோ மஞ்சளுடன் இருவர் கைது.
புத்தளம் முந்தல் – பள்ளிவாசல்பாடு கடற்பிரதேசத்தில் ஆயிரம் கிலோவிற்கும் அதிக மஞ்சளுடன் நேற்று புதன்கிழமை (10) இருவர் கைது செய்ததாக கடற்படையினர் தெரிவித்தனர். பள்ளிவாசல்பாடு கரையோரப் பகுதியில் கடற்படை நடத்திய சுற்றிவளைப்பில் 1,373 கிலோ மஞ்சளுடன் சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டனர். அவற்றின் பெறுமதி 50 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமென மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கடல் மார்க்கத்தில் இவை கொண்டுவரப்பட்டுள்ளன. குறித்த பகுதியிலிருந்து லொறி ஊடாக நாட்டின் வேறு பகுதிகளுக்கு அவற்றை எடுத்துச் செல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடற்படை…