News Editor Team

வேலைநிறுத்தப் போராட்டத்தால் தாமதமாகும் சுங்க நடவடிக்கைகள்.

சுங்கத்துறை அதிகாரிகள் அண்மையில் மேற்கொண்ட வேலைநிறுத்தப் போராட்டத்தால், கொள்கலன்களை சரிபார்ப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக சரக்கு வாகன சாரதிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலைமையை விரைவுபடுத்த முறையான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்கின்றனர். இந்த நிலைமையை கூடிய விரைவில் வழமைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாக மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகம் சுங்கப் பேச்சாளர் திரு.சிவலி அருக்கொட தெரிவித்திருந்தார்.

Read More

பசுமைப் பொருளாதாரக் கொள்கைகளை கடைப்பிடிப்பதன் மூலம் ஒரு நாடாக எம்மால் முன்னோக்கிப் பயணிக்கலாம்.

பல நாடுகள் எமக்கு நன்கொடைகளை வழங்காமல் கடன் நிவாரண உதவிகளையே வழங்கி வருகின்றன. நாம் இவற்றைத் திருப்பிச் செலுத்த கடமைப்பட்டுள்ளோம். திருப்பிச் செலுத்துவதில் பெற்ற கடன் உதவியை முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நாம் கடனைப் பெற்றால், மூலதனத் தொகை மற்றும் கடன் தொகையின் வட்டி ஆகியவற்றைக் கண்டறிந்து, அந்தத் தொகையைப் பயன்படுத்தி, மூலதனத்திற்கும் வட்டிக்கும் மேலதிகமாக பலன்களைத் தரும் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். கடன்களை பெற்று நஷ்டத்தை ஏற்படுத்தும் திட்டங்களை வகுத்தால், வெற்றியளிக்காத திட்டங்களை நடைமுறைப்படுத்துவதால்…

Read More

சலுகைக் கடன் திட்டத்தின் கீழ் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் விரிவாக்கத் திட்டத்தின் இரண்டாவது முனையத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கு The Japan International Cooperation Agency இணங்கியுள்ளதாக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

Read More

பொது இடங்களில் பெண்கள் ஹிஜாப் கட்டாயம் அணிய வேண்டும் – ஈரான்

ஈரான் நாட்டில் பொது இடங்களில் பெண்கள் ஹிஜாப் கட்டாயம் அணிய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை மீறுபவர்களுக்கு தண்டனை வழங்கப்படுகிறது. இந்த நிலையில் தலைநகர் தெக்ரானில் உள்ள துருக்கி ஏர்லைன்ஸ் விமான நிறுவன அலுவலகத்தில் பணி யாற்றும் ஈரான் நாட்டை சேர்ந்த பெண்கள் ஹிஜாப் அணியாமல் பணி செய்வ தாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து அந்த அலுவலகத்தில் போலீசார் சோதனை நடத்தினர். இதனால் அப்போது பெண் ஊழியர்கள் ஹிஜாப் அணியாமல் இருப்பது தெரியவந்தது. துருக்கி…

Read More

NJS கட்சி SJB உடன் கூட்டணி

பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தலைமையிலான நிதஹஸ் ஜனதா சபாவ கட்சி ஐக்கிய மக்கள் சக்தி உடன் கூட்டணி அமைக்க தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.

Read More

இலங்கை ரயில் சேவையின் அவசர அறிவிப்பு.

இன்று (10) நண்பகல் 12 மணிக்கு முன்னர் பணிக்கு சமூகமளிக்காத அனைத்து ரயில் நிலைய அதிபர்களும் சேவையில் இருந்து விலகியவர்களாக கருதப்படுவார்கள் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டு ஜூன் 29 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் (2390/28) ரயில்வே சேவையை அத்தியாவசிய சேவையாக அரசாங்கம் அறிவித்துள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் எஸ்.எஸ்.முதலிகே கடிதம் ஊடாக அறிவித்துள்ளார். ரயில் நிலைய அதிபர்கள் மற்றும் ரயில் கட்டுப்பாட்டாளர்களால் இன்று அறிவிக்கப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பை ஒட்டி இந்த…

Read More

சம்பளத்தை அதிகரிக்காத நிறுவனங்களின் குத்தகை ஒப்பந்தம் இரத்து செய்யப்படும்.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராக சில பெருந்தோட்டக் கம்பனிகள் நீதிமன்றத்தை நாடியமையால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்  பிரதிநிதிகள் உட்பட  பெருந்தோட்டத் தொழிலாளர்கள் குழுவினர்கள்   தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில் நேற்று (09 ) அமைச்சர் மனுஷ நாணயக்காரவைச் சந்தித்தனர். குறிப்பிட்ட பெருந்தோட்டக் கம்பனிகள் அதிகரிக்கப்பட்ட சம்பளத்தை வழங்க மறுப்பதால் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து அமைச்சர் தொழிலாளர் பிரதிநிதிகளிடம் விளக்கினார். மேலும்  இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திலும்…

Read More

உடன் அமுலாகும் வகையில் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு.

நேற்று நள்ளிரவு (09) முதல் உடன் அமுலாகும் வகையில், சில வகை அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது. வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனையின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, பயறு ஒரு கிலோகிராமின் விலை 998 ரூபாவாகவும், இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு ஒரு கிலோகிராமின் விலை 205 ரூபாவாகவும், சிவப்பு சீனி ஒரு கிலோகிராமின் விலை 375 ரூபாவாகவும், வெள்ளை சீனி ஒரு கிலோகிராமின் விலை 263 ரூபாவாகவும் விலை…

Read More

இன்று அதிகாலை இடம்பெற்ற பஸ் விபத்து.

திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி திருகோணமலை பிரதான வீதியின் 96 ம் கட்டை முள்ளிப்பொத்தானையில் கொழும்பிலிருந்து நேற்றிரவு செவ்வாய்க்கிழமை (09) திருகோணமலை நோக்கி வந்த அதிசொகுசு தனியார் பயணிகள் போக்குவரத்து பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று புதன்கிழமை  (10) அதிகாலை இடம்பெற்றுள்ளது. தனியாருக்கு சொந்தமான அதிசொகுசு பஸ் ஒன்றே பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பஸ் விபத்தில் சாரதி, நடத்துனர் உட்பட பயணிகள் சிலரும் காயமடைந்துள்ளதாக பொலிஸார்  தெரிவித்துள்ளனர்….

Read More

மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் புதிய அறிவிப்பு.

மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களை ஆராய்ந்த பின்னர் இறுதித் தீர்மானம் எதிர்வரும் ஜூலை 15 ஆம் திகதி அறிவிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ, இதற்கு முன்னர் பதிவு செய்த பல்வேறு தொழிற்துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 46 பிரதிநிதிகளிடம் கருத்துக்கள் பெறப்பட்டதாக குறிப்பிட்டார். எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் மின்சாரக் கட்டணத் திருத்தங்கள் தொடர்பான முன்மொழிவுகளை இலங்கை மின்சார சபை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளது. அந்த முன்மொழிவுகளின்படி, குறைக்கப்படும்…

Read More