மோட்டார் சைக்கிள் மோதி பாதசாரி உயிரிழப்பு
(UTV | கொழும்பு) – அநுராதபுரம் பிரதேசத்தில் தம்புத்தேகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தம்மன்னாவ – பஹலகம வீதியில் நேற்று (3) இடம்பெற்ற விபத்தில் பெண் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தம்புத்தேகம பொலிஸார் தெரிவித்தனர். தம்மன்னாவையிலிருந்து பஹலகம நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று செலுத்துனரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் பயணித்த பெண் பாதசாரி மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது மோட்டார் சைக்கிள் சாரதியும் பெண் பாதசாரியும் படுகாயமடைந்துள்ள நிலையில் தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட…