தேங்கிக் கிடக்கும் குப்பைகளை நாளைய(12) தினத்திற்குள் முழுமையாக அகற்ற நடவவடிக்கை
(UTVNEWS | COLOMBO) – கொழும்பு நகரில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை நாளைய(12) தினத்திற்குள் முழுமையாக அகற்றக் கூடியதாக இருக்கும் என கொழும்பு மாநாகர சபையின் நகர ஆணையாளர் பாலித நாணயக்கார தெரிவித்திருந்தார். தற்போதுவரை கொழும்பில் தேங்கிக் கிடந்த சுமார் 250 டன்னுக்கும் அதிகளவான குப்பைகள் புத்தளம் அறுவக்காடு குப்பைக்கூள முகாமை மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். வத்தளை – கெரவலப்பிட்டியவில் உள்ள குப்பைகளை சேகரிக்கும் மையத்தின் கொள்ளளவு எல்லை கடந்ததை அடுத்து, அங்கு மேலும்…