Chief Editor

தமிழ் தலைவர்களை சந்திக்கும் ஜெய்சங்கர்!

இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கும், தமிழ் கட்சிகளின் தலைவர்களுக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சந்திப்பு நாளை மறுதினம் மாலையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் கட்சிகளின் தலைவர்களுக்கு தனித்தனியாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ் கட்சிகளின் தலைவர்கள் அனைவரையும் ஒன்றாகவே இந்திய வெளிவிவகார அமைச்சர் சந்திக்கவுள்ளார். இரா.சம்பந்தன் (உதவியாளர் ஒருவரையும் அழைத்து செல்வார்), செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன், க.வி.விக்னேஸ்வரன், செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்கள் இந்த சந்திப்பில் கலந்து கொள்வார்கள்…

Read More

மொட்டு வேட்பாளராக தம்பிக்க: ஆனால் 10 நிபந்தனைகள்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியானது ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கு தம்மிடம் பத்து நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும் வர்த்தகருமான தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார். தனியார் தொலைகாட்சிக்கு வழங்கிய விசேட நேர்காணலில் இதனை தெரிவித்துள்ளார். இந்நிலையில், தற்போது அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். எனினும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் 51% வாக்குகளைப் பெறுவது உறுதியானால், பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தாம் போட்டியிடுவேன் என பதில் வழங்கியுள்ளதாக தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும்…

Read More

வாக்குப்பெட்டிகளை தயார்படுத்துமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்குத் தேவையான வாக்குப்பெட்டிகளை தயார்படுத்துமாறு அதிகாரிகளுக்கு ஏற்கெனவே பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார். எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஜனாதிபதித் தேர்தல் நிச்சயமாக நடைபெறவுள்ளதால், வாக்குப்பெட்டிகள் இவ்வாறே தயாரிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். வாக்குச் சாவடிகள் குறித்த விவரங்கள் கிடைத்தவுடன், வாக்குப் பெட்டிகளில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். வாக்குப்பதிவுக்காக பயன்படுத்தப்பட்ட ஏராளமான வாக்குப்பெட்டிகள் சேதமடைந்துள்ளதாகவும், அவற்றை அரசு தொழிற்சாலைக்கு அனுப்பி சரி…

Read More

இலங்கையின் பொருளாதாரம் 5.3%மும், கைத்தொழில் துறை 11.8%மும் வளர்ச்சி பெற்றுள்ளது!

சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, 2024ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கைப் பொருளாதாரம் 5.3% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதுடன், கைத்தொழில் துறையும் 11.8% வளர்ச்சியைப் பெற்றுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், 2022 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டில் 12% க்கும் குறைவான எதிர்மறையான பொருளாதாரத்தை கொண்ட ஒரு நாடாக பதிவான…

Read More

“தியாகங்கள் மூலமே ஒரு நாடு வெற்றிகரமான எதிர்காலத்தை அடைய முடியும்” ஹஜ் வாழ்த்தில் உலமா சபை

அல்லாஹு அக்பர்! அல்லாஹு அக்பர்! அல்லாஹு அக்பர்! அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இலங்கை வாழ் முஸ்லிம்கள் அனைவருக்கும் ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறது. நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களினதும் அவர்களது மனைவி மற்றும் குழந்தையினதும் (அலைஹிமஸ்ஸலாம்) தியாகங்களை நினைவுபடுத்தும் முகமாக அல்லாஹு தஆலா இத்திருநாளை எமக்கு அருளியுள்ளான். அக்குடும்பத்தினரின் தியாகங்கள் முழு மனித சமூகத்திற்கும் என்றும் நிலைத்து நிற்கும் ஒரு சிறந்த முன்மாதிரியாகும். அர்ப்பணிப்புகள், தியாகங்களின் ஊடாகவே வாழ்வில் வெற்றியடைய…

Read More

“சமூக நாகரீகங்களுக்கான முகவாசல்களை உருவாக்கியவர் இறைதூதர் இப்றாஹீம்!” – ஹஜ் வாழ்த்தில் ரிஷாட்!

இலட்சியப் போக்கில் வாழ்வை செம்மைப்படுத்திய இறைதூதர் இப்றாஹிமின் முன்மாதிரிகள், சகலருக்கும் சிறந்த வழிகாட்டுதல்களாக உள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். புனித ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஐயாயிரம் வருடங்களுக்கு முன்னரே சிறந்த நாகரீகத்தைக் கட்டியெழுப்பும் இலட்சியத்தில் பயணித்தவர் இறைதூதர் இப்றாஹிம். அன்னாரின் முன்மாதிரிகள் உலகம் உள்ள வரைக்கும் சிறந்த வழிகாட்டுதல்களாக உள்ளன. மானிட நாகரீகத்துக்கான முகவாசல்களை தனது மகன்களூடாக ஆரம்பித்த இலட்சியப் புருஷர்…

Read More

“மனித குலத்தை போற்றும் ஒரு சந்தர்ப்பமாகவும் இந்த ஈதுல் அல்ஹா பெருநாளைக் கருதலாம்” ஹஜ் வாழ்த்தில் சஜித் பிரேமதாஸா

உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களின் மிக முக்கியமான கலாச்சார மற்றும் மதப் பண்டிகையாகக் கருதப்படும் ஈதுல் அல்ஹா பெருநாளை முன்னிட்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளும் இத் தருணத்தில் அதன் முக்கிய விழுமியங்களைப் பற்றி நினைவில் கொள்வது சாலச்சிறந்தது என உணர்கின்றேன். வரலாற்றின் தொடக்கத்திலிருந்தே, மக்கள் பல்வேறு மத தியாகங்களுக்காக கூட்டாக கூடினர், அதில் தங்கள் சொந்த மதத்துடன் தொடர்புடைய மரபுகள் பாதுகாக்கப்பட்டு அவற்றுக்கிடையே தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டனர். இஸ்லாத்தில் புனிய ஹஜ் யாத்திரையும் அவ்வாறானதொன்றாகும். இஸ்லாத்தின் ஐந்து பெரும்…

Read More

“தியாகம் மற்றும் நல்லிணக்கத்துடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும்” ஹஜ் வாழ்த்தில் ஜனாதிபதி ரணில்

ஆன்மிக மற்றும் உலக வெற்றியை அடைய, மனிதன் சுயநலத்தை விட்டொழித்து, தியாகம் மற்றும் நல்லிணக்கத்துடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் முஸ்லிம்கள் அந்த உன்னத நோக்கத்தின் அடிப்படையில் ஹஜ் பெருநாளைக் கொண்டாடுகிறார்கள். உலகம் முழுவதிலுமிருந்து முஸ்லிங்கள் அனைவரும் ஒரே நோக்கத்துடன் ஒரே புனிதத் தலத்தில் கூடி, மனிதகுலத்தின் எதிர்பார்ப்பான சமூகத்தின் ஒருமைப்பாட்டிற்காக இத்தினத்தில் பிரார்த்தனை செய்கிறார்கள். உலக மக்கள் அனைவருக்கும் சமத்துவம் மற்றும் சகோதரத்துவ உணர்வுகளை விதைக்கும் ஹஜ் கொண்டாட்டம், உலக அமைதிக்கான சிறந்த…

Read More

மன்னார் மாவட்டத்திற்கு 5000 காணி உறுதிகள்- ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி ரணில்

உறுமய திட்டத்தினால் மக்களின் காணி உரிமையை உறுதிப்படுத்தி, சொத்துப் பெறுமதியையும் உயர்த்த முடிந்துள்ளது – ஜனாதிபதி. உறுமய திட்டத்தினால் மக்களின் காணி உரிமையை உறுதிப்படுத்தி, சொத்துப் பெறுமதியையும் உயர்த்த முடிந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கொவிட் தொற்று – பொருளாதார நெருக்கடியினால் சரிவடைந்த சொத்துக்களின் பெறுமதி “உறுமய” திட்டத்தின் ஊடாக வலுவடைந்திருப்பதால், அதனூடாக நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்த முடியும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். “உறுமய” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், மன்னார் மாவட்ட மக்களுக்கு காணி உறுதிகளை…

Read More

இலங்கை மக்களிடம் மன்னிப்புக்கோரும் மெத்யூஸ்

அணியென்ற வகையில் முழு நாட்டிடமும் மன்னிப்பு கோருவதாக இலங்கை அணியின் சகலதுறை வீரர் எஞ்சலோ மெத்யூஸ் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இந்த மன்னிப்பை கோரியுள்ளார். அணியின் நம்பிக்கையும், நாட்டின் நம்பிக்கையும் அழிக்கப்பட்டமைக்கு வருந்துகிறோம்  என எஞ்சலோ இதன்போது குறிப்பிட்டுள்ளார். மேலும் கருத்து தெரிவித்த எஞ்சலோ மெத்தியூஸ், “ஒரு அணி என்ற வகையில் எங்களின் நம்பிக்கையும், நாட்டின் நம்பிக்கையும் அழிந்து போனதற்கு நாங்கள் மிகவும் வருந்துகிறோம். எங்களை மன்னிக்குமாறு கோருகிறோம். நாங்கள் இங்கு வந்ததிற்கான நோக்கத்தை…

Read More