Chief Editor

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 27ஆவது வருடாந்த மாநாடு!

(அஷ்ரப் ஏ சமத்) ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 27ஆவது வருடாந்த மாநாடு எதிர்வரும் 30.06.2024 காலை 09.30 மணிக்கு கொழும்பு 10 தபால் தலைமைக் காரியாலய கேட்போர் கூடத்தில் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் தலைமையில் நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில் பிரதம அதிதியாக இலங்கையின் ஜக்கிய நாடுகள் சபை வதிவிட இணைப்பாளர் மாா்க்ஸ் அன்றோ ரன்சே கௌரவ அதிதியாக இலங்கை ஈரான் இஸ்லாமிய குடியரசின் துாதுவர் கலாநிதி அலி றீசா டெல்கோஸ் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்….

Read More

மஹிந்த ராஜபக்ஷ சீனா பறந்தார்!

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று வியாழக்கிழமை (27) காலை சீனாவிற்கு சென்றுள்ளார். சீனாவின் அமைதியான சகவாழ்வுக்கான ஐந்து கோட்பாடுகள் வெளியிடப்பட்டதன் 70வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் மாநாட்டில் கலந்து கொள்ள அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் விடுத்த அழைப்பை ஏற்று மஹிந்த ராஜபக்ஷ அங்கு சென்றுள்ளார். இந்த மாநாடு சீனாவின் தலைநகர் பீஜிங்கில் நாளை வெள்ளிக்கிழமை (28)  நடைபெறவுள்ளது. இந்த விஜயத்தில் மஹிந்த ராஜபக்ஷ சீனப் பிரதமர் லீ கியாங் மற்றும்…

Read More

கெஹலிய தாக்கல் செய்த ரிட் மனு மீண்டும் நீதிமன்றத்தால் ஒத்திவைப்பு!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்த ரிட் மனு இன்று மீண்டும் மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டது. குறித்த வழக்கு இன்று (27) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது  ஜூலை மாதம் 01ஆம் திகதிக்கு  ஒத்திவைக்கப்பட்டது. இன்றையதினம் சட்டமா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நிர்மலன் விக்னேஸ்வரன் நீதிமன்றத்தில் வாதங்களை முன்வைத்தார். மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தினால் தன்னை வழக்கு விசாரணை முடியும் வரை விளக்கமறியலில் வைக்குமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை இரத்துச் செய்து ஆணை பிறப்பிக்குமாறு…

Read More

வில்பத்துவை அழிக்கச்சென்ற பவித்ராவுக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தடை

விடத்தல்தீவு(வில்பத்து என அழைத்த ) இயற்கை சரணாலய பகுதியின் ஒரு பகுதியை இறால்பண்ணை திட்டத்திற்கு ஒதுக்கும் வகையில் வனஜீவராசிகள் மற்றும் வனவளங்கள் அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி வெளியிட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துவதற்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. மீன் வளர்ப்பு தொழில்பூங்காவை அமைப்பதற்காக,  மன்னார் மாவட்டம் விடத்தல்தீவு இயற்கை சரணாலயம் என  குறிப்பிடப்பட்ட  வர்த்தமானி அறிவித்தல் முடிவிற்கு வருவதாக  மேமாதம் விசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியாகியிருந்தது. எனினும் அரசாங்கத்தின் முடிவிற்கு எதிராக சூழல்நீதிக்கான நிலையம் நீதிமன்றத்தில்…

Read More

பதவி விலகிய கிரிக்கட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர்!!

இலங்கை தேசிய கிரிக்கட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக பணியாற்றிய இங்கிலாந்தின் கிறிஸ் சில்வர்வுட்டும் அந்தப் பதவியில் இருந்து விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக சிறிலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது. இதேவேளை இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பு ஆலோசகராக பணியாற்றிய இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தனவும் பதவி விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Read More

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு கூறிய நற்செய்தி என்ன? முழு உரை தமிழ் வடிவில்

வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பதில் இலங்கை அடைந்துள்ள வெற்றி நாட்டை நேசிக்கும் அனைவருக்கும் கிடைத்திருக்கும் ஒரு நற்செய்தி! இலங்கையின் பிரதான உத்தியோகபூர்வ இருதரப்பு கடன் வழங்குநர்களுடன் நேற்று (26) காலை கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்து உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவுடன் இறுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. சீனாவின் எக்ஸிம் வங்கியுடன் இன்று பீஜிங்கில் இறுதி உடன்பாடு எட்டப்பட்டதோடு அது  அதற்கான முறையான நடைமுறைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிதார். நாட்டை நேசிக்கும் அனைவருக்கும்…

Read More

“இன்றும் போராடவுள்ள ஆசிரியர், அதிபர்கள்”

நாடளாவிய ரீதியில் சுகவீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் இன்றும் ஈடுபடவுள்ளதாக அதிபர் – ஆசிரியர் சங்கங்கள் அறிவித்துள்ளன. சம்பள முரண்பாடு உள்ளிட்ட சில பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி, சுகவீன விடுமுறையை பதிவு செய்த அதிபர் – ஆசிரியர் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் நேற்று(26) பகல் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக ஆரம்பித்த எதிர்ப்பு நடவடிக்கையை கலைப்பதற்கு பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டிருந்தனர். இந்த தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. தமது…

Read More

“இன்றும் போராட்டத்தில் ஈடுபடவுள்ள ஆசிரியர், அதிபர்கள்” ​

நாடளாவிய ரீதியில் சுகவீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் இன்றும் ஈடுபடவுள்ளதாக அதிபர் – ஆசிரியர் சங்கங்கள் அறிவித்துள்ளன. சம்பள முரண்பாடு உள்ளிட்ட சில பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி, சுகவீன விடுமுறையை பதிவு செய்த அதிபர் – ஆசிரியர் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் நேற்று(26) பகல் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக ஆரம்பித்த எதிர்ப்பு நடவடிக்கையை கலைப்பதற்கு பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டிருந்தனர். இந்த தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. தமது…

Read More

மக்காவிலிருந்து வந்த மெளலவியின் உடமையில் இருந்த கோடி ரூபா பெறுமதியான தங்கம்!

(UTV கொழும்பு) ஹஜ் கடமையை நிறைவேற்ற மக்கா சென்றதாக கூறப்படும் மெளலவி ஒருவரும், அவரது குழுவில் சென்ற பெண் ஒருவரும் மீள நாடு திரும்பும் போது பெரும் தொகை தங்க நகைகளை சட்ட விரோதமாக நாட்டுக்குள் கொண்டுவர முயன்றார்கள் எனும் குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்முனை பகுதியை சேர்ந்த்த 44 வயதான மெளலவி ஒருவரும், 49 வயதான பெண் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் தெரிவித்தனர். அதன்படி சுமார் ஒரு…

Read More

5.8 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தத்தை இலங்கை எட்டியுள்ளது.!

இருதரப்பு கடன் வழங்குவோரின் உத்தியோகபூர்வ குழுவுடன் 5.8 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தத்தை இலங்கை எட்டியுள்ளது. பாரிஸில் இன்று (26)  நடைபெற்ற ஒன்று கூடலின் போதே இந்த இலக்கை அடைய முடிந்துள்ளது. இந்த உடன்படிக்கை இலங்கைக்கு கணிசமான கடன் நிவாரணத்தை வழங்குவதுடன் அத்தியாவசிய பொது சேவைகளை பேணுவதற்கும் அபிவிருத்தி தேவைகளுக்கான நிதி வசதிகளை வழங்குவதற்கும் இந்த ஒப்பந்தம் உதவும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Read More