ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 27ஆவது வருடாந்த மாநாடு!

(அஷ்ரப் ஏ சமத்)

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 27ஆவது வருடாந்த மாநாடு எதிர்வரும் 30.06.2024 காலை 09.30 மணிக்கு கொழும்பு 10 தபால் தலைமைக் காரியாலய கேட்போர் கூடத்தில் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் தலைமையில் நடைபெறவுள்ளது.

இம்மாநாட்டில் பிரதம அதிதியாக இலங்கையின் ஜக்கிய நாடுகள் சபை வதிவிட இணைப்பாளர் மாா்க்ஸ் அன்றோ ரன்சே கௌரவ அதிதியாக இலங்கை ஈரான் இஸ்லாமிய குடியரசின் துாதுவர் கலாநிதி அலி றீசா டெல்கோஸ் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

பிரதம பேச்சாளர்களாக பிரபல எழுத்தாளர் எம்.எல்.ஏ மன்சூர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பொதுச் செயலாளர் முன்னாள் சட்ட சபை உறுப்பினருமான கே.ஏ எம் முஹமட் அபுபக்கர், ஆகியோர் கலந்து கொள்வார்கள். இதன்போது சன்டே ஜலன்ட் பத்திரிகையின் ஆசிரியர் மெனிக் டி சில்வா வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளார்.

இதேவேளை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட ஒலிபரப்பாளர் திருமதி புர்ஹான் பீ இப்திக்கார், வசந்தம் தொலைக்காட்சியின் சிரேஷ்ட செய்தி முகாமையாளர் எம்.சித்தீக் ஹனிபா, பிறை எப்.எம்.வானொழி தலைமையதிகாரி பசீர் அப்துல் கையும், மூத்த ஊடகவியலாளர்களான சுகைப் எம் காசீம், அமீர் ஹூசைன், தென் பிராந்திய ஊடகவியலாளர் எம்.எம்.எம் பசீர், வீரகேசரி ஆசிரியர் ஸ்ரீ கஜன், தினக்குரல் ஆசிரியர் ஆர்.பி ஹரன், உதயம் செய்தி ஆசிரியர் சிறராஜ் எம். ஷாஜகான ஆகியோரும் இதன்போது விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.

இந் நிகழ்வில் போரத்தின் உதவித ்தலைவர் ஊடகவியலாளர் றிப்தி அலி தகவல் அறியும் சட்டம் தொடர்பான ஊக்குவிப்புக்காக விசேடமாக கௌரவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *