Chief Editor

ரணில் ஜனாதிபதி, சஜித் பிரதமர்: SJBமேற்கொள்ளும் புதிய வியூகம்!

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகி, சஜித் பிரேமதாச பிரதமரானால் நாட்டிற்கு மிகவும் நல்லது என்றும், ரணில் விக்ரமசிங்கவும் அவரது கட்சியும் ஒரே சித்தாந்தத்தை கொண்டே செயற்படுகின்றார்கள் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன (Rajitha Senaratne) குறிப்பிட்டுள்ளார். விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இந்தக் கருத்துதை வெளியிட்டுள்ளார். ”நாடு இப்போது இருக்கும் இடத்தில் இருந்து கொஞ்சம் கூட மாறினால், நாட்டின் போக்கு மாறிவிடும். இதனால் சர்வதேச நாணய நிதியம் நாட்டை…

Read More

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சம்பந்தன் வெளிப்படுத்திய தகவல்!!

ஜனாதிபதி தேர்தலில் ரணில், சஜித், அநுர ஆகிய மூவரும் போட்டியிடப்போகின்றார்கள் என்றால் அவர்களது தேர்தல் விஞ்ஞாபனங்களையும் ஆராய்ந்து எமது மக்களின் நிலைப்பாடுகளை புரிந்து நாம் யாரை ஆதரிப்பது என்பது குறித்து முடிவெடுப்போம் என தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள தேர்தல்கள் தொடர்பில் தமிழ் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில், “அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தல் செப்டெம்பர் 17இற்கும், ஒக்டோபர் 16இற்கும்…

Read More

கோபா குழு பல அரசு நிறுவனங்களுக்கு அழைப்புவிடுத்துள்ளது!

அடுத்த வாரம் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு அல்லது கோபா குழு பல அரசு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. எதிர்வரும் வாரத்தில் மூன்று நாட்களுக்கு கோபா குழு கூடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, நாளை மறுநாள் ஏற்றுமதி விவசாய திணைக்களத்தின் அதிகாரிகளும், 19ம் திகதி தொழிலாளர் திணைக்கள அதிகாரிகளும் அழைக்கப்பட்டுள்ளனர். மேலும், பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களத்தின்  அதிகாரிகள் எதிர்வரும் 20ம் திகதி கோபா குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். அந்த அரச நிறுவனங்களின் நிர்வாகத் திறன் மற்றும் நிதி…

Read More

இனி இலங்கை மக்களின் வருமானத்தில் பெருக்கம் ? அரசு வெளியிட்டுள்ள நம்பிக்கை

சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாம் தவணை கடனை பெற்றுக்கொள்வதன் மூலம் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முடியும் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் மக்களின் வருமானத்தை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர்களான ஷெஹான் சேமசிங்க மற்றும் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளனர். மூன்றாம் தவணை மூலம் வருமானத்தை பெருக்க பல வாய்ப்புகள் உருவாகும் எனவும் பொருளாதார நன்மைகளை மக்கள் நேரடியாகப் பெறுவார்கள் எனவும் தெரிவித்தனர். மீண்டும் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்காத நாடாக…

Read More

யுத்த குற்றச்சாட்டில்: இலங்கையின் தலைவர்கள் கைதாகுவார்கள்? சரத் வீரசேகரவுக்கு வந்த அச்சம்

இந்நாட்டில் காணப்பட்ட பிரிவினைவாத யுத்தத்தில் போர் முறையில் போராடிய வீரர்கள் யுத்தக் குற்றம் இழைத்ததாகக் குற்றஞ்சாட்டி அவர்களுக்கு எதிராகவும், அரசியல் தலைவர்களுக்கு எதிராகவும் யுத்தக் குற்றச் சாட்சியங்களைச் சேகரிக்கும் வெளியகப் பொறிமுறையொன்று இரண்டு வருடங்களாக சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் 46/1 பிரேரணைக்கு அமைய அமைக்கப்பட்டுள்ளதாகத் தேசிய பாதுகாப்புப் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் (கலாநிதி) சரத் வீரசேகர தெரிவித்தார்.  இந்நாட்டு இராணுவத் தலைவர்களுக்கு எதிராகக் கணிசமானளவு சாட்சிகள் அவர்களிடம் இருப்பதாக குறித்த பொறிமுறையின் ஊடாக அண்மையில்…

Read More

காத்தான்குடியில் மெளலவி ஒருவரின் மனைவி மீது துப்பாக்கிச்சூடு : காரணம் வெளியானது

வீடொன்றில் மகனுடன் வசித்து வந்த பெண் ஒருவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் தப்பிச் சென்ற துப்பாக்கிதாரி காத்தான்குடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தானகுடி மீன்பிடி இலாஹா வீதி அஹமட் லேனில்   நேற்று (14)  முற்பகல்  இடம்பெற்றுள்ளது. இதன் போது குறித்த துப்பாக்கி சூட்டில்  வீட்டில் வசித்த இளம் பெண்  காயமடைந்த நிலையில்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த பெண்ணின் வீட்டுக்கு துப்பாக்கியுடன் வந்த   நபர்…

Read More

தேர்தல் நடத்துவதில் சிக்கலா? IMFயின் விளக்கம்

சர்வதேச நாணய நிதியத்திற்கு இலங்கையில் தேர்தலை நடத்துவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகள் குழுவின்  மூத்த தலைவர் பீட்டர் ப்ரூவர் தெரிவித்துள்ளார். எந்தவொரு நாட்டின் ஜனநாயகத்தையும் சர்வதேச நாணய நிதியம் மதிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையில் தேர்தல் நடத்தப்பட்டால் அது சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் நேரத்தை பாதிக்கும் எனவும், உரிய அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து புதிய கால அட்டவணையை தயாரிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட…

Read More

தமிழ் மக்களுக்கு நாமல் விடுத்த முன்னெச்சரிக்கை!

வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக திடீரென தமது கொள்கைகளை மாற்றும் அரசியல்வாதிகள் குறித்து தமிழ் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச(Namal Rajapaksa) வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும், தமிழ் மக்களுக்கும் இந்த எச்சரிக்கையை விடுப்பதாக பொதுஜன பெரமுனவின தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். 13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஆரம்பம் முதலே ஆதரவளித்து வரும் கட்சிகளையும் அதனை எதிர்த்த கட்சிகளையும் தமிழ் மக்கள் நம்பலாம். எனினும் தேர்தலுக்காக தமது கொள்கைகளை மாற்றிக்கொள்பவர்கள்…

Read More

மகளை தவறான முறையில் தொலைபேசியில் காணொளி எடுத்த தாய் முல்லைத்தீவில் கைது!

முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட கிராமம் ஒன்றில் தனது மகளை தவறான முறையில் கையடக்க தொலைபேசியில் காணொளி எடுத்த குற்றச்சாட்டில் தாயார் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். குறித்த சம்பவமானது நேற்று முன்தினம்(12) புதுக்குடியிருப்பு தேவிபுரம் பாரதி வீதி பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதன்போது 32 வயதுடைய இரண்டு பதின்ம வயது பெண்பிள்ளைகளை கொண்ட தயாரே கைதுசெய்யப்பட்டுள்ளார். கணவனை பிரிந்த நிலையில் வாழ்ந்து வரும் இவர் தனது 13 வயதுடைய மகள் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த வேளை அவரை…

Read More

மஹிந்த தரப்புடன் இருப்பவர்களுடன் எப்போதும் இணையப் போவதில்லை- சஜித்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் எந்தவித பேச்சுவார்த்தைகளும் இல்லை. அவரோடு இணையப் போவதும். இல்லை. நாட்டை அதாள பாதாளத்தில் தள்ளிய மஹிந்த தரப்புடன் இருப்பவர்களுடன் எப்போதும் இணையப் போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்று (13) நடத்திய ஊடக சந்திப்பின் போது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் நீங்களும் இணைந்து கொள்ள போவதாக கூறப்படும் கருத்துக்களில் உண்மை இருக்கிறதா என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்…

Read More