Chief Editor

எரிபொருட்களின் விலைகளை திருத்தம்!

இன்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தமது எரிபொருட்களின் விலைகளை திருத்த தீர்மானித்துள்ளது. அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 13 ரூபாவால் குறைக்கப்படவுள்ள நிலையில் அதன் புதிய விலை 355 ரூபாவாகும். அதேபோல், ஒரு லீற்றர் டீசலின் விலை 16 ரூபாவால் குறைக்கப்படவுள்ள நிலையில் அதன் புதிய விலை 317 ரூபாவாக குறைவடையவுள்ளது. மேலும், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 13 ரூபாவால் குறைக்கப்படவுள்ள…

Read More

எரிபொருட்களின் விலைகளை திருத்தம்!

இன்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தமது எரிபொருட்களின் விலைகளை திருத்த தீர்மானித்துள்ளது. அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 13 ரூபாவால் குறைக்கப்படவுள்ள நிலையில் அதன் புதிய விலை 355 ரூபாவாகும். அதேபோல், ஒரு லீற்றர் டீசலின் விலை 16 ரூபாவால் குறைக்கப்படவுள்ள நிலையில் அதன் புதிய விலை 317 ரூபாவாக குறைவடையவுள்ளது. மேலும், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 13 ரூபாவால் குறைக்கப்படவுள்ள…

Read More

ரிஷாட் பதியுதீனுடன் இணைந்த மயோன் முஸ்தபாவின் மகன் ரிஸ்லி முஸ்தபா!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியுடன் சற்றுமுன் உத்தியோகபூர்வமாக இணைந்துகொண்டார் முன்னாள் இராஜாங்க அமைச்சர் மயோன் முஸ்பாவின் மகனும், கல்முனை தொகுதி பொஜன பெரமுன கட்சியின் அமைப்பாளருமான ரிஸ்லி முஸ்பா. தற்போது, சாய்ந்தமருதுவில் நடைபெறும் நிகழ்வில் வைத்து ரிஷாட் பதியுதீன் முன்னிலையில் அக்கடையுடன் இணைந்துகொண்டுள்ளார்.

Read More

A/L உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன் வெளியாகியுள்ளன.

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் பெறுபேறுகளுக்காக காத்திருப்பவர்கள் doenets.lk/examresults என்ற பக்கத்தின் தமது தகவல்களை உள்ளீடு செய்வதன் மூலம் பெறுபேறுகளை அறிந்து கொள்ள முடியும். 2023ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தர பரீட்சை கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்றிருந்த நிலையில் 346,976 பரீட்சாத்திகள் நாடு முழுவதிலுமிருந்து தோற்றியுள்ளனர்.

Read More

தோட்ட நிர்வாகத்தின் தான்தோன்றி தனமான செயற்பாடு: தொழிலாளர்களுக்கு நேரடியாக சென்று தீர்வு பெற்றுக்கொடுத்த ஜீவன்

நுவரெலியா மாவட்டம் நானு ஓயா உடரதல்ல தோட்ட தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்தின் தான்தோன்றி தனமான செயற்பாட்டை கண்டித்து நான் எடுத்த அதிரடி தொழிற்சங்க நடவடிக்கையினால் பணி நீக்கம் செய்யப்பட்ட மூன்று தொழிலாளர்களுக்கு உடனடியாக தொழில் வழங்க களனிவெளி தோட்ட கம்பனி இணக்கம் தெரிவித்ததுள்ளதாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்: உடரதல்ல தோட்டத்தில் இலக்கம் 05 தேயிலை மலையில் தேயிலையை அகற்றி அங்கு கோப்பி பயிரிட களனிவெளி பெருந்தோட்ட நிர்வாகத்தின்…

Read More

ரைஸியின் அஞ்சலி நிகழ்வு: UNயின் அழைப்பை புறக்கணித்த அமெரிக்கா!

உலங்கு வானூர்தி விபத்தில் மரணமடைந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசிக்கு (Ebrahim Raisi) அஞ்சலி செலுத்துவதற்காக உறுப்பு நாடுகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையால் விடுக்கப்பட்ட அழைப்பை அமெரிக்கா (US) புறக்கணித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரானுடன் (Iran) பல ஆண்டுகளாக கடுமையான மோதலில் ஈடுபட்டு வரும் அமெரிக்கா, இதுபோன்ற மோசமான மனித உரிமை மீறல்களை செய்த ஒருவருக்கு அஞ்சலி செலுத்தக் கூடாது என்று கூறியுள்ளது. மேலும், ஐக்கிய நாடுகள் சபை ஈரான் மக்களுடன் நிற்க வேண்டும்…

Read More

“முடி உலர்த்தி” மூலம் முடியை உலர வைத்த புத்தள இளைஞன் மரணம்!

புத்தளத்தில் மின்சாரம் தாக்கி, புத்தளம் தள வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று (30) உயிரிழந்துள்ளார். புத்தளம் , ஐந்தாம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த துவான் சலீம் முஹம்மது சஹ்ரான் ( வயது 17) எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். குறித்த இளைஞன், கடந்த 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தனது வீட்டில் குளித்து விட்டு , முடி உலர்த்தி மூலம் முடியை…

Read More

லங்கா ஹொஸ்பிடல்ஸ் வைத்திருக்கும் பங்குகள் திறைசேரிக்கு!

ஶ்ரீலங்கா இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் பணிப்பாளர் சபையின் முக்கிய தீர்மானம் தொடர்பில் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் பொது நிறுவனத் திணைக்களம் நிறுவனத்திற்கு அறிவித்துள்ளதாக லங்கா ஹொஸ்பிடல்ஸ் கார்ப்பரேஷன் பிஎல்சி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. லங்கா ஹொஸ்பிடல்ஸ் கார்ப்பரேஷன் பிஎல்சியில் உள்ள ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் வைத்திருக்கும் பங்குகளை திறைசேரியின் செயலாளருக்கு மாற்றுவதே இந்த தீர்மானமாகும். இந்த முடிவின் ஒரு பகுதியாக, மேற்கூறிய பங்குகளை மாற்றுவதற்கு வசதியாக பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தின்…

Read More

இன்று எரிபொருள் விலை குறையும் வாய்ப்பு!

மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின்படி, எரிபொருள் விலை திருத்தம் இன்று (31) இரவு இடம்பெறவுள்ளது. இலங்கை ரூபாவின் பலம் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவினால், எரிபொருள் விலை குறையும் என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

Read More

டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என்று தீர்ப்பு!

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் வழக்கு விசாரணையில் அவர் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் தம்மைப் பற்றிய தவறான செய்திகளை மறைக்க டிரம்ப் பணம் வழங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. இது தொடர்பில் டிரம்ப் 34 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கினார். இந்நிலையில் அமெரிக்காவில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட முதல் ஜனாதிபதியாக டிரம்ப் கருதப்படுகிறார். டிரம்ப் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை 11 ஆம் திகதியன்று தண்டனை வழங்கப்படும்…

Read More