Chief Editor

நாளை காலை விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்

(UTVNEWS | COLOMBO)- சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் நாளை(03) காலை விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. செவ்வாய் முதல் வெள்ளிவரை நடைபெறவுள்ள சபை அமர்வுகளின்போது கலந்தரையாடப்படவேண்டிய விடயங்களை குறித்து ஆராய்வதற்கும், திகதிகளை ஒதுக்கீடு செய்வதற்காகவுமே இக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Read More

தெஹிவளை கடற்பரப்பில் கறுப்பு நிற எண்ணெய்

(UTVNEWS | COLOMBO) – தெஹிவளையிலிருந்து கல்கிசை வரையான கடற்பரப்பில் கறுப்பு நிற எண்ணெய் படர்ந்துள்ளமையை காணமுடிகின்றது. இது தொடர்பில் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் அதிகாரியொருவரான, டர்னி பிரதீப் கருத்து தெரிவிக்கையில், ஏதேனும் கப்பலொன்றிலிருந்து அனுமதியின்றி கடலுக்கு எண்ணெய் விடுவிக்கப்பட்டிருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாகவும், இதுகுறித்து தேடுதல் நடவடிக்கைகளும், விசாரணைகளும் இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்தார். மேலும் அதனை தொடர்ந்து, கடல்சார் சூழல் பாதுகாப்பு சபைக்குச் சொந்தமான கப்பல்கள் சில, தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக அவர் மேலும்…

Read More

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் மற்றுமொரு சந்தேக நபர் கைது

(UTVNEWS | COLOMBO) – தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பிற்கு நிதியுதவிகளை வழங்கிய குற்றச்சாட்டில் தொலைத்தொடர்பு பொறியியலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மொஹமட் சஹீப் என்ற நபரே தெஹிவளை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Read More

ஓய்வூதியக்காரர்களின் சம்பளம் மறுசீரமைப்பு

(UTVNEWS | COLOMBO) – 2019ம் ஆண்டு வரவு செலவுத் திட்ட முன்மொழிவுக்கு அமைவாக sக்கப்பட உள்ளதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஏ.ரத்னசிறி தெரிவித்துள்ளார். இந்த மறுசீரமைப்பு அடுத்த மாதம் 1ம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும். இதற்கான சுற்றறிக்கைகள் அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஏ.ரத்னசிறியினால் நேற்று(01) அனைத்து அமைச்சின் செயலாளர்களுக்கும் மாகாண பிரதம செயலாளர்களுக்கும் மாவட்ட செயலாளர்களுக்கும் திணைக்களங்களின் தலைமை அதிகாரிகளுக்கும், பிரதேச செயலாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதற்கமைய 2017ம் ஆண்டு ஜனவரி மாதம்…

Read More

இராணுவ அதிகாரி போன்று செயற்பட்ட நிசார் இம்ரான் கைது

(UTVNEWS | COLOMBO) – இராணுவ அதிகாரி போன்று செயற்பட்ட முஹம்மட் நிசார் இம்ரான் எனும் நபர் காவற்துறை அதிரடி படையினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் மொரட்டுவ – சொய்சாபுரத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.

Read More

நாளை முதல் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நிலை

(UTVNEWS | COLOMBO) -நாட்டில் அடுத்த சில நாட்களில் (ஜூன் 03 ஆம் திகதியிலிருந்து) தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நிலை உருவாகவுள்ளது. எனவே நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழையுடனான வானிலையில் ஜூன் 03 ஆம் திகதியிலிருந்து மேலும் அதிகரிப்பு ஏற்படக் கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது. மேல், தென், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. யாழ்ப்பாணம், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ…

Read More

காவற்துறை துப்பாக்கி சூட்டில் சந்தேக நபர் பலி

(UTVNEWS | COLOMBO) – அகுரஸ்ஸ ஊருமுத்த பிரதேசத்தில் சட்டவிரோத மதுபான சுற்றிவளைப்பில் ஈடுபட்ட காவற்துறை ஊத்தியோகத்தர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சந்தேக நபர் காவற்துறை துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளார். குறித்த சந்கே நபரை கைது செய்வதற்கு முயற்சித்த போது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.

Read More