ஓய்வூதியக்காரர்களின் சம்பளம் மறுசீரமைப்பு

(UTVNEWS | COLOMBO) – 2019ம் ஆண்டு வரவு செலவுத் திட்ட முன்மொழிவுக்கு அமைவாக sக்கப்பட உள்ளதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஏ.ரத்னசிறி தெரிவித்துள்ளார்.

இந்த மறுசீரமைப்பு அடுத்த மாதம் 1ம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும். இதற்கான சுற்றறிக்கைகள் அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஏ.ரத்னசிறியினால் நேற்று(01) அனைத்து அமைச்சின் செயலாளர்களுக்கும் மாகாண பிரதம செயலாளர்களுக்கும் மாவட்ட செயலாளர்களுக்கும் திணைக்களங்களின் தலைமை அதிகாரிகளுக்கும், பிரதேச செயலாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் திகதி தொடக்கம் அதற்கு முன்னர் ஓய்வூதியம் பெறும் அனைத்து அரச ஊழியர்களின் ஓய்வூதியச் சம்பளம் 2016ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 25ம் திகதி அன்று அரச நிர்வாக சுற்றுநிருபம் இலக்கம் 03-2016, இரண்டு உப ஆவணங்களில் குறிப்பிடப்பட்ட 2017 ஜனவரி மாதம் முதலாம் திகதிக்கு கிடைக்க வேண்டிய சம்பளத்தின் அடிப்படையில் திருத்தத்தை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக செயலாளர் மேலும் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *