Chief Editor

வீரமுனை சர்ச்சை: பிள்ளையானால் வர முடியுமென்றால் ஏன் முஸ்லிம் தலைவர்களால் வர முடியாது! முபாற‌க் அப்துல் ம‌ஜீத்

(UTV | கொழும்பு) –   ச‌ம்மாந்துறை வீர‌முனை வ‌ர‌வேற்பு கோபுர‌ம் ச‌ம்ப‌ந்த‌மாக‌  முஸ்லிம் ஆர்ப்பாட்ட‌க்கார‌ர்க‌ளுக்கெதிராக‌  பிள்ளையான் க‌ள‌த்துக்கு வ‌ர‌ முடியும் என்றால் முஸ்லிம் எம்.பீக்க‌ளைக் கொண்ட‌ க‌ட்சித்த‌லைவ‌ர்க‌ள் பூனைக‌ள் போல் சுருண்டுகொண்டுள்ள‌னரா ? என‌ ஸ்ரீ ல‌ங்கா உல‌மா க‌ட்சி கேள்வி எழுப்பியுள்ளது. ச‌ம்மாந்துறை வீர‌முனை வ‌ர‌வேற்பு கோபுர‌ விவகாரம் தொடர்பாக ஸ்ரீல‌ங்கா உல‌மா க‌ட்சி தலைவர் மெளலவி முபாற‌க் அப்துல் ம‌ஜீத் இது விடயமாக மேலும் குறிப்பிடும்போது, எலி கொழுத்து பூனையை பார்த்து அழைக்கும்…

Read More

நள்ளிரவு முதல் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைப்பு!

(UTV | கொழும்பு) – இன்று (02) நள்ளிரவு முதல் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி, 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர்  100 ரூபாவினால் குறைக்கப்படவுள்ள நிலையில், அதன் புதிய விலை 3,690 ரூபாவாகும். 5 கிலோ கிராம் எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 40 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 1,482 ரூபாவாகும். 2.3 கிலோ கிராம் எடையுள்ள எரிவாயு சிலிண்டரின்…

Read More

ஹிருணிகாவின் பிணை மனுவின் விசாரணை ஜூலை 4 ஆம் திகதி

கொழும்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவின் விசாரணை ஜூலை 4 ஆம் திகதிக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இளைஞர் ஒருவரை கடத்திச் சென்ற வழக்கில் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஹிருணிகா பிரேமச்சந்திர, கொழும்பு மேல் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட தண்டனையை சவால் செய்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளார். இந்த பிணை மனு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்…

Read More

வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது!

ஒக்டோபர் மாதத்தில் நாட்டின் மிக அத்தியாவசிய சேவைகளுக்கு தேவையான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதற்கமைவாக, நோயாளர் காவு வண்டி, குப்பை சேகரிக்கும் பாரவூர்திகள், தொழில்துறை மற்றும் கட்டுமானத்திற்குத் தேவையான தொழிற்சாலை வாகனங்கள் போன்றவற்றை இறக்குமதி செய்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. விசேட தேவைகள் கருதி இந்த வாகனங்கள் அவ்வப்போது சிறிய அளவில் இறக்குமதி செய்யப்படுவதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், கார்கள், வான்கள், கெப் ரக வாகனங்கள் போன்ற தனியார் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான வாய்ப்பை…

Read More

12 மொட்டு எம்பிகள், சஜித்துடன் இணையவுள்ளனர்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் இணையவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். தமிழரசுக் கட்சி, முஸ்லிம் கட்சிகள் உட்பட பல கட்சிகளை சேர்ந்த 30 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் கூட்டணியில் இணையவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை வெற்றிபெறச் செய்வதற்கு ஐக்கிய மக்கள் கூட்டணியில் இணைந்துள்ள அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார். மேலும் கருத்து…

Read More

ரி20 உலகக்கிண்ணம் – கிண்ணத்தை வென்றது இந்தியா!

ரி20 உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் விளையாடி வருகின்றன. இதில் நாணயசுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் துடுப்பாட்ட தீர்மானித்து. அதன்படி இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக தலைவர் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி களமிறங்கினர். இந்திய அணிக்கு தொடக்கம் பேரதிர்ச்சியாக அமைந்தது. தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரோஹித் சர்மா 9 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அதன்பின் களமிறங்கிய ரிஷப் பந்த் ஓட்டம் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தது இந்திய…

Read More

2024 T20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரின் மாபெரும் இறுதிப் போட்டி இன்று!!

2024 T20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரின் மாபெரும் இறுதிப் போட்டி இன்று (29) நடைபெற உள்ளது. அதன்படி, இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதவுள்ள நிலையில், போட்டி பார்படோஸில் இலங்கை நேரப்படி  இன்றிரவு 8:00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் 9வது ‘டி-20’ உலகக்கிண்ணத் தொடர் இடம்பெற்று வருகிறது. ‘நடப்பு சாம்பியன்’ இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் உள்ளிட்ட முன்னணி அணிகள் தொடரில் இருந்து வெளியேறின. இன்று பார்படோஸின்…

Read More

ஹிருணிக்காவுக்கு விசேட சிறையா? எப்படி உள்ளார்?

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர வெலிக்கடை சிறைச்சாலையின் மகளிர் பிரிவின் பொது விடுதியில் சிறை வைக்கப்பட்டுள்ளார். சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பெண் கைதிகளுக்குரிய உடையையே அவர் அணிந்திருந்ததாகவும் சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்தார். ஹிருணிகா பிரேமச்சந்திர  வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டு, தேவையான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு, விடுதிக்கு  அனுப்பி வைக்கப்பட்டதாகவும், அதுவரை அவர் விசேட கோரிக்கை எதையும் முன்வைக்கவில்லை எனவும் சிறைச்சாலை ஆணையாளர்  தெரிவித்தார். அவரை விசேட வார்டில் வைக்க வேண்டிய அவசியமில்லை என்றும்…

Read More

ஹிருனிக்காவுக்கு ஏன் 03 வருட சிறை? முழு விபரம்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றினால் 3 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தெமட்டகொட பகுதியிலுள்ள கடை ஒன்றில் பணிபுரிந்த இளைஞன் ஒருவனை கடத்திச் சென்று தவறான முறையில் தடுத்து வைத்தமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. நீண்ட விசாரணையின் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இந்த தீர்ப்பை அறிவித்தார். இதன்படி, குற்றம் சாட்டப்பட்ட ஹிருணிகா பிரேமச்சந்திர 18 குற்றச்சாட்டுக்களில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளதோடு, ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தலா 20,000 ரூபா…

Read More

மாலைதீவு ஜனாதிபதிக்கு சூனியம் செய்ய முயன்ற அமைச்சர் கைது!

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது மூயிஸிற்கு எதிராக செய்வினை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் அவரது கட்சியைச் சேர்த்த அமைச்சர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாலைத்தீவு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஷாம்னாஸ் சலீம் மற்றும் ஜனாதிபதி அலுவலகத்தில் அமைச்சராக பணியாற்றிவரும் அவரது கணவர் ஆதம் ரமீஸ் ஆகியோர் செய்வினை செய்வதற்கு முயன்றதாக குற்றம் சுமத்தப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பதவிகளும் பறிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவர்களுடன் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  எவ்வாறாயினும் அவர்களின் இவ்வாறான…

Read More