நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட கெஹலிய!

(UTV | கொழும்பு) – குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மாளிகாகந்த நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். சர்ச்சைக்குரிய மனித இம்யூனோகுளோபுலின் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நேற்று முன்னாள் அமைச்சரிடம் 10 மணித்தியாலங்களுக்கு மேலாக வாக்குமூலம் பதிவு செய்திருந்தது.   BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Read More

தேசிய மாநாட்டை விரைவில் நடத்துமாறு – சிறீதரனுக்கு சுமந்திரன் கடிதம்

(UTV | கொழும்பு) – எமது வரலாற்றில் முதன்முறையாக வாக்கெடுப்பினாலே தெரிவுசெய் யப்பட்ட தலைவராகிய நீங்கள் அப்படியான அதற்குகந்த விமர்சையோடு வைபவரீதியாக பதவியேற்பது முக்கியமான விடயமாகும். எமது மக்கள் மத்தியில் எழுந்திருக்கும் பல்வேறு சந்தேகங்களுக்கும் விமர்சனங்களுக்கும் அது முற்றுப்பள்ளி வைக்கும். ஆகவே தயவு செய்து காலம் தாழ்த்தாது வெகு விரைவில் அந்தப் பகிரங்கப் பொது நிகழ்வை நடத்துமாறும் அன்புரிமையோடு நான் கேட்டுக்கொள்கின்றேன். இவ்வாறு தமிழரசுக் கட்சியின் தலைவர் சிவஞானம் சிறீதரன் என்று குறிப்பிட்டு அவருக்குக் கடிதம் எழுதியிருக்கின்றார்…

Read More

மொழித் திறன் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஜப்பானில் தொழில் வாய்ப்பு – அனுப பஸ்குவல்

(UTV | கொழும்பு) – நாட்டிலுள்ள இளைஞர் சமூகத்தை மேலும் தொழில் பயிற்சிகளுக்கு உள்வாங்குவதற்காக சீன அரசாங்கத்துடன் மூன்று ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் இவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இருபது இலட்சம் பயனாளிகளுக்கு அஸ்வெசும சமூகப் பாதுகாப்பு நிவாரணத்தை வழங்குவதே இந்த ஆண்டு…

Read More

தூய்மையான ஜனநாயக கலாசாரத்தை இளைஞர்களிடையே வளர்க்க வேண்டும் – மஹிந்த தேசப்பிரிய

(UTV | கொழும்பு) – எதிர்காலத்தில் இலஞ்சம் மற்றும் ஊழலற்ற தூய்மையான அரசியல் கலாசாரத்துக்கு இளைஞர்களை தயார்ப்படுத்துவதுடன், இனவாத, மதவாத குடும்ப அரசியலில் இருந்து விடுபட்டு ஒரு தூய்மையான ஜனநாயக கலாசாரத்தை இளைஞர்களுக்கிடையில் வளர்த்தெடுக்க வேண்டும். இவ்வாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரும் முன்னாள் தேர்தல் ஆணையாளருமான மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். ஜனநாயக இளைஞர் காங்கிரஸ் அமைப்பினர் ஏற்பாடு செய்த மாகாண சபைகளை வலுப்படுத்தல் தொடர்பாக இளைஞர், யுவதிகளுக்கு விளக்கமூட்டும் செயலமர்வு மட்டக்களப்பில் இன்று (28) நடைபெற்றது….

Read More

மின்சார சபை ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை!

(UTV | கொழும்பு) – இலங்கை மின்சார சபையில் பணியாற்றும் 10 ஆயிரம் ஊழியர்களிடம், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் விளக்கமளிக்குமாறு கோரி கடிதம் அனுப்பியுள்ளதாக, இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. குறித்த ஊழியர்கள் அனைவரும் அண்மையில் சுகயீன விடுமுறையைப் பதிவு செய்துவிட்டு ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றியமை தொடர்பாக விளக்கமளிக்குமாறு கோரியே குறித்த கடிதம் அனுப்பப் பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இதுகுறித்து இலங்கை மின்சார சபை பேச்சாளர் பிரதி பொது முகாமையாளர் நோயல் பிரியந்த கருத்துத் தெரிவிக்கையில்”…

Read More

மன்னார், பி.பி பொற்கேணி, பாலர் பாடசாலையின் விடுகைவிழா!

(UTV | கொழும்பு) – மன்னார், பி.பி பொற்கேணி – அளக்கட்டு அஸ் / ஸபா பாலர் பாடசாலையின் விடுகைவிழா கடந்த (19) வெள்ளிக்கிழமை மாலை பாலர் பாடசாலை முன்றலில் இடம்பெற்றது.   இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களை வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் அலிகான் சரீப், முசலி பிரதேச…

Read More

ஜெனிவா தீர்மானங்களை பலவீனப்படுத்த கூட்டுச் சதி – சபா குகதாஸ் குற்றச்சாட்டு

(UTV | கொழும்பு) – ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைப் பேரவையில் முள்ளிவாய்க்கால் இறுதிப் போர் தொடர்பான குற்றங்களை அடிப்படையாக வைத்து கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் பல நெருக்கடிகளை சர்வதேச ரீதியாக கொடுப்பதை தவிர்க்க எதிர்வரும் கூட்டத் தொடர்களில் புதிதாக வர இருக்கும் தீர்மானங்களை பலவீனப்படுத்து இலங்கை அரசாங்கத்துடன் சர்வதேச சக்திகளும் இணைந்து பெரும் கூட்டுச் சதி ஒன்றை மேற் கொள்ள ஆரம்பித்துள்ளனர் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார். இன்றையதினம் அவர் வெளியிட்ட ஊடக…

Read More

பாராளுமன்ற கூட்டத்தொடர் ஒத்திவைப்பு?

(UTV | கொழும்பு) – பாராளுமன்றத்தில் (ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர்) எதிர்வரும் 24ஆம் திகதியன்று நிறைவுக்கு கொண்டுவரப்படவுள்ளதென தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்பின்னர், பாராளுமன்றத்தின் புதியக் கூட்டத்தொடரை ஜனாதிபதி பெப்ரவரி 7ஆம் திகதியன்று உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ளார். ஆகையால், இந்தக் கூட்டத்தொடரின் இறுதி பாராளுமன்ற நாட்களாக ஜனவரி 23 மற்றும் 24 ஆம் திகதிகள் இருக்கும். அந்த இரண்டு நாட்கள் மட்டுமே பாராளுமன்றம் கூடும், எதிர்வரும் 25ஆம் திகதி பூரணை தினம் என்பதால் இரண்டு நாட்கள் மட்டுமே…

Read More

கையடக்க தொலைபேசிகளை கொள்வனவு செய்வோருக்கு விசேட அறிவித்தல்!

(UTV | கொழும்பு) – இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட கையடக்க தொலைபேசிகளை மாத்திரமே வாடிக்கையாளர்கள் கொள்வனவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கையடக்க தொலைபேசிகளை கொள்வனவு செய்வோருக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு வழங்கியுள்ள விசேட அறிவித்தலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் மோசடியில் சிக்குவதைத் தடுக்க, சர்வதேச மொபைல் சாதன அடையாள IMEI எண்ணைச் சரிபார்க்கும்படி ஆணைக்குழு மக்களிடம் கோரியுள்ளது. IMEI எண் என்பது “சர்வதேச மொபைல் சாதன அடையாள எண்” ஆகும்.இது…

Read More

நாடாளுமன்ற உறுப்பினர்களை பின்தொடரும் புலனாய்வாளர்கள்!

(UTV | கொழும்பு) – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் சிலர் எதிர்க்கட்சியில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அதனை அறிய அரச புலனாய்வு அதிகாரிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களை பின்தொடர்வதாக தகவல் வெளியாகியுள்ளது. சிங்கள ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பொதுஜன பெரமுனவை சேர்ந்த அமைச்சர்கள் குழுவொன்று ஐக்கிய மக்கள் சக்தியில் இணைவதற்கு எடுத்துள்ள தீர்மானங்களை அறிய பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின்…

Read More