பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலுக்கு
(UTV|கொழும்பு) – புத்தளம் மாவட்டம் மற்றும் நீர்க்கொழும்பு, கொச்சிக்கடை பொலிஸ் அதிகாரத்திற்குட்பட்ட பிரதேசத்திற்கு பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
(UTV|கொழும்பு) – புத்தளம் மாவட்டம் மற்றும் நீர்க்கொழும்பு, கொச்சிக்கடை பொலிஸ் அதிகாரத்திற்குட்பட்ட பிரதேசத்திற்கு பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
(UTV|கொழும்பு) – கொரோனா என அறியப்பட்டுள்ள “கொவிட் – 19) வைரஸ் உலகளவில் பரவி வரும் நிலையில் நாட்டிற்கு வருகை தருவோரை தனிமைப்படுத்துவது தேசிய கடமை என்ற ரீதியில் கடற்படையினர் மார்ச் 16ம் திகதி பூஸ்ஸ கடற்படை இராணுவ முகாமை தடுப்பு முகமாக பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
(UTV|கொழும்பு) – தன் மீது கொண்டுள்ள நம்பிக்கையினை எச்சந்தர்ப்பத்திலும் இழக்கும் வகையில் நடந்து கொள்ள மாட்டேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.
(UTV|ஐரோப்பா) – கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் உள்நுழைய ஒரு மாதம் (30 நாட்களுக்கு) தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
(UTV|சுவிட்சர்லாந்து) – உலகையே உலுக்கி வரும் அச்சுறுத்தல் மிக்க கொரோனா வைரஸின் விட்டம் மிகச்சிறியது, அதனால் எவ்வகையான முக கவசத்தினையும் பயன்படுத்தி அதைத் தடுக்கலாம் என்பது வதந்தி என்றும் வைத்தியசாலை ஊழியர்களுக்கு N95 வகை முக கவசத்தை உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ளது.
(UTV|சீனா) – உலகளவில் பரவிவரும் அச்சுறுத்தல் மிக்க கொவிட் 19 வைரஸ் தொற்றில் இதுவரை 7,987 பேர் பலியாகியுள்ளதோடு, பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 198,422 ஆக பதிவாகியுள்ளது.
(UTVNEWS | COLOMBO) -கொரோனா வைரஸ் தொற்று பரவல் குறித்த அதிக ஆபத்தை எதிர்கொள்ளும் புத்தளம் மாவட்டத்தை முழுமையாக அல்லது பகுதியளவில் முடக்கும் நிலைமை ஏற்படலாம் என சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாரச்சி தெரிவித்தார். இன்று மாலை இடம்பெற்ற விஷேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறுனார். மேலும் தெரிவிக்கையில்,கொரோனா வைரஸ் தொற்று பரவுவதற்கான ஆபத்து அதிகமான இடமாக புத்தளம் மாவட்டம் உள்ளது. இத்தாலியில் இருந்து, மார்ச் முதலாம் திகதிக்கும் 10…
(UTVNEWS | COLOMBO) –வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வழங்கிய கடன், திருப்பிச் செலுத்துதல்களை 6 மாதங்களுக்கு வசூலிக்க வேண்டாம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். நாட்டினுள் ஏற்பட்டுள்ள தற்போதைய சூழ்நிலை தொடர்பில் அவர் நாட்டு மக்களுக்கு விஷேட உரை நிகழ்த்தினார். அந்த உரையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.மேலும் அவர் தெரிவிக்கையில் இன்று நள்ளிரவுடன் பருப்பு 1கிலோ ரூ65 க்கும் டின்மீன் ரூ100 க்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
(UTVNEWS| COLOMBO) –கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிகை எண்ணிக்கை 43 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 6 பேர் இன்று (17) இனங்காணப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். மேலும் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.