இன்று கொரோனா தொற்றுக்கு உள்ளான எவரும் இனங்காணப்படவில்லை
(UTV | கொழும்பு) -இன்றைய தினத்தில் இதுவரை (4.30 PM) கொரோனா தொற்றுக்கு உள்ளான எவரும் இனங்காணப்படவில்லை என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
(UTV | கொழும்பு) -இன்றைய தினத்தில் இதுவரை (4.30 PM) கொரோனா தொற்றுக்கு உள்ளான எவரும் இனங்காணப்படவில்லை என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
(UTVNEWS | COLOMBO) – மஸ்கெலியா பகுதியில் கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட ஆறு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஸ்கெலியா பகுதியில் கொரோனா தொற்று பரவியிருக்கலாம் என சந்தேகத்தின் பேரில் தனிமைப்படுத்தப்பட்ட ஆறு பேருக்கு 14 நாட்களின் பின் கொரோனா தொற்று ஏற்பட்டதற்கான எவ்வித அறிகுறியும் காணப்படாமையினால் இன்று (25) அவர்களுக்கு கொரோனா ஏற்படவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டு அவர்களுக்கு சான்றிதலும் வழங்கி வைக்கப்பட்டன.
(UTV|கொழும்பு) – இங்கிலாந்து இளவரசர் சார்ள்ஸுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இலேசான நோய் அறிகுறிகளுடன் அவர் வீட்டிலிருந்து பணிகளைத் தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்கொட்லாந்தில் உள்ள அவர்களது இல்லத்தில் இளவரசர் சார்ள்ஸூம் கார்ன்வால் சீமாட்டியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
(UTV | கொழும்பு) -நாடளாவிய ரீதியாக பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக இடைநிறுத்தப்பட்ட விமான சேவைகள் தொடர்பில் ஸ்ரீலங்கன் விமான சேவை விஷேட அறிவித்தல் ஒன்று விடுத்துள்ளது.
(UTV|கொழும்பு) – நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்றுக்கு உள்ளான 500 இற்கும் மேற்பட்டோர் இருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டு,கொழும்பு IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இலங்கையர் ஒருவர் முழுமையாக குணமடைந்த நிலையில் வைத்தியசாலையிலிருந்து வெளியேற்றியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு இலக்காகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்து வீடு திரும்பிய இரண்டாவது நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே வெளிநாட்டு சுற்றுலா வழிகாட்டி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் குணமடைந்து வெளியேறினார் என்பது…
(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆயிரத்தை கடந்துள்ளது. கொரோனா வைரஸ் தற்போது உலகின் 196 நாடுகளில் பரவியுள்ளது. இந்நிலையில், உலகம் முழுவதும் இதுவரை 4 லட்சத்து 22 ஆயிரத்து 959 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. இவர்களில் இதுவரை 18 ஆயிரத்து 907பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும், 2 லட்சத்து 90 ஆயிரத்து 652 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 143…
(UTV|கொழும்பு) – ஊரடங்குச்சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியிலும் நாட்டிலுள்ள சகல ´ஒசுசல´ மருந்தகங்களும் திறந்திருக்குமென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
(UTV|கொழும்பு) – நாளை(24) நள்ளிரவு முதல் 21 நாட்களுக்கு முழு இந்தியாவையும் முடக்க பிரதமர் நரேந்திர மோடி தீர்மானித்துள்ளார்.
(UTV|கொழும்பு) -சவூதி அரேபியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக முதன் முதலாக மதீனாவில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.