சீரற்ற வானிலையால் – 15 பேர் பலி

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் 15 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கடந்த மே 15ஆம் திகதி முதல் நேற்று (02ஆம் திகதி) வரையான 19 நாட்களில் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளன. கொழும்பு, காலி, இரத்தினபுரி, புத்தளம், நுவரெலியா, பதுளை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளன. பெரும்பாலான இறப்புகள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளன. அனர்த்தங்களினால் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ள மரணங்களின் எண்ணிக்கை 04 ஆகும். புத்தளம்…

Read More

கொழும்பில் 27 இடங்கள் அடையாளம்

கொழும்பில் கடும் மழை அல்லது சிறிய மழை பெய்தாலும் குறுகிய நேரத்தில் வெள்ளத்தில் மூழ்கக்கூடிய 27 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை மாநகர ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கடும் மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் கொழும்பின் மருதானை போன்ற 27 இடங்களில் மிகவும் வேகமான முறையில் வெள்ளத்தில் மூழ்கின்றன. பல்வேறு காரணங்களுக்காக கொழும்பு நகரில் கால்வாய்கள் மூடப்பட்டமை இந்த நிலைமையை பாதித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கொழும்பு நகரின் கால்வாய்களை அண்மித்துள்ள…

Read More

இந்திய பெருங்கடலில் 4 நிலநடுக்கங்கள்!

(UTV | கொழும்பு) – மாலைதீவு அருகே இன்று காலை இந்தியப் பெருங்கடலில் 4 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் இலங்கைக்கு எந்த பாதிப்பு இல்லை என புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் (GSMB) குறிப்பிட்டுள்ளது. முதலாவதாக ஏற்பட்ட நிலநடுக்கம் 4.8 ரிச்டர் அளவில் 10 கிலோ மீற்றர் ஆழத்தில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து ஏந்பட்ட நிலநடுக்கங்கள் 5.2, 5.8 மற்றும் 5.0 ஆக பதிவாகியுள்ளன. இரண்டாவது மற்றும்…

Read More

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

(UTV | கொழும்பு) – வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ,மத்திய, மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மேல்,…

Read More

வானிலை தொடர்பான புதிய அறிக்கை!

(UTV | கொழும்பு) – வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்கு பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள புதிய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகளவான மழை பெய்யக்கூடும். மேற்கு, சப்ரகமுவ,…

Read More

நாட்டில் வடகீழ் பருவப்பெயர்ச்சி காலநிலை ஆரம்பிக்கிறது!

(UTV | கொழும்பு) – வங்காள விரிகுடாவின் கடல் பிராந்தியத்திற்கு மேலாக வளிமண்டலத்தில் தளம்பல் நிலை காணப்படுவதன் காரணமாக நாடு முழுவதிலும் மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் இதனால், நாடு முழுவதிலும் வடகீழ் பருவப்பெயர்ச்சிக்கான காலநிலை படிப்படியாக ஆரம்பிக்கின்றது என்றும் சிரேஷ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார். வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், வடக்கு, கிழக்கு, வடமத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய…

Read More

கடும் மின்னல் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

(UTV | கொழும்பு) – இன்று இரவு கடும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மாவட்டத்திலும் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய பலத்த மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக் கூடிய சாத்தியம் அதிகம் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்த பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று…

Read More

நீடிக்கும் வௌ்ள அபாய எச்சரிகை!

(UTV | கொழும்பு) – இரண்டு பிரதான ஆறுகள் தொடர்பில் விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, கிங் கங்கை மற்றும் நில்வலா ஆற்றுப்பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. நில்வலா ஆற்றுப் பகுதியில் பெய்து வரும் மழையினால் அக்குரஸ்ஸ, மாலிம்பட, திஹகொட, மாத்தறை மற்றும் கம்புருப்பிட்டிய ஆகிய ஆற்றுப் படுகையின் தாழ்வான பகுதிகளில் மீண்டும் வெள்ளம் அதிகரிக்கக் கூடும் என நீர்ப்பாசன திணைக்களம்…

Read More

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

(UTV | கொழும்பு) – நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலை அல்லது இரவு வேளையில் கடுமையான மின்னலுடன் கூடிய இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் பதுளை, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் இவ்வாறு கடுமையான மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும்வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை…

Read More

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் பெரும்பாலானோர் பாதிப்பு!

(UTV | கொழும்பு) – நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 32 குடும்பங்களைச் சேர்ந்த 132 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.இதன்படி, களுத்துறை மாவட்டத்தில் புலத்சிங்கள பிரதேச செயலக பிரிவு மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி, அயகம, கிரியெல்ல, கொடகவெல ஆகிய பிரதேச செயலக பிரிவுகளைச் சேர்ந்த மக்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும், உயிரிழப்பு அல்லது காயம் ஏற்பட்டதாக இதுவரை தகவல் பதிவாகவில்லை. மண் சரிவு, கனமழை மற்றும் மரங்கள்…

Read More