மழையுடனான வானிலை இன்றும் தொடரும் – மண்சரிவு எச்சரிக்கை.
நாட்டில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக களுத்துறை, மாத்தறை மற்றும் காலி மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. நிலம் மற்றும் சுவர்களில் விரிசல்கள் ஏற்படுதல், மரங்கள், வேலிகள் மற்றும் மின்கம்பங்கள் சாய்தல், திடீரென நீரூற்றுகள் தோன்றல், சேற்று நீர் வெளியேறல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் எச்சரிக்கையாக இருக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். அனர்த்த முகாமைத்துவ மையத்தின் 117 என்ற இலக்கம் ஊடாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு தகவல்…