Category: உள்நாடு
சந்தேகத்தின் பேரில் கைதானோரில் இருவருக்கு பிணை [VIDEO]
(UTV | BATTICALOA) – உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தேசிய தௌஹித் ஜமாத் இயக்கத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 63 பேரில் இருவர் இன்று(31) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வருடத்தில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது
(UTV|COLOMBO) – போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினால் 2019 ஆம் ஆண்டில் அதிகளவான சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அட்மிரல் ரவிந்திர இன்றுடன் ஓய்வு
(UTV|COLOMBO) – பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவிந்திர விஜயகுணரத்ன தனது 39 வருட கால சேவையினை நிறைவு செய்து இன்று(31) ஓய்வு பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கண்ணாடி பொருட்கள் விற்பனை நிலையத்தில் தீ விபத்து
(UTV|COLOMBO) – அம்பலாங்கொட புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள கண்ணாடி பொருட்கள் விற்பனை செய்யும் நிலையம் ஒன்றில் திடீர் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (31) காலை இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் பிரதேசவாசிகள் மற்றும் அம்பலாங்கொட தீயணைப்பு பிரிவினர் ஒன்றிணைந்து தீயிணை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் அம்பாலங்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அரச ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிப்பு
(UTVNEWS | COLOMBO) –அரச ஊழியர்களின் அடிப்படை நாளை முதல் அதிகரிக்கப்படும் என நிதி அமைச்சு அறிவித்துள்ளது. இதன் மூலம் 2015 ஆம் ஆண்டை விட அரசு ஊழியர்களின் சம்பளம் 107 சதவீதம் அதிகரிக்கும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. 2016 ஆம் ஆண்டின் ஜனவரி முதலாம் திகதி முதல் நான்கு முறை அரச ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எட்டாவது பாராளுமன்றத்தின் 4வது தொடர் நாளை மறுதினம்
(UTV|COLOMBO) – எட்டாவது பாராளுமன்றத்தின் 4 ஆவது கூட்டத் தொடரை வைபவ ரீதியாக ஆரம்பிக்கும் நிகழ்வு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் எதிர்வரும் 3ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு இடம்பெறவுள்ளது.
சந்திரசிறி சூரியஆராச்சி தொடர்ந்தும் விளக்கமறியலில்
(UTV | POLONNARUWA) – முன்னாள் பிரதி அமைச்சரும், ஐக்கிய தேசியக் கட்சியின் மின்னேரியா தொகுதி அமைப்பாளருமான சந்திரசிறி சூரியஆராச்சியை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க பொலனறுவை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கைப்பேசிகளை பயன்படுத்துவோருக்கு விடுத்துள்ள கோரிக்கை
(UTV|COLOMBO) – இந்தக் காலப்பகுதிகளில் தங்களது கையடக்க தொலைபேசிகளுக்கு கிடைக்கப்பெறும் குறுந்தகவல்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் அறிவுறுத்தியுள்ளது. அறியப்படாத இலக்கங்களிலிருந்து இவ்வாறான குறுந்தகவல்கள் கிடைக்கப் பெறுகின்றன. இவ்வாறாக வரும் குறுந்தகவல்களில் பெறுமதியான பரிசில்கள் வாடிக்கையாள்கள் வென்றிருப்பதாக குறிப்பிடப்படுகிறது. குறித்த பெறுமதியான பரிசை பெற்றுக்கொள்ள ஒரு தொகை பணத்தை செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. அவ்வாறான குறுந்தகவல்கள் கிடைக்கப்பெறுவோர் தமது தனிப்பட்ட விபரங்களை வழங்க வேண்டாம் எனவும் அவர்கள்…
அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் கைது [UPDATE]
(UTV | COLOMBO) – அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரூமி மொஹமட் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் CID இல் சரண் ——— UPDATE (UTV | COLOMBO) – அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரூமி முஹமத் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் சற்று முன்னர் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சாரதி அனுமதிப்பத்திர வைத்திய சான்றுகள் பெறும் முறையில் மாற்றம்
(UTV|COLOMBO) – சாரதி அனுமதிப்பத்திரங்களை பெறுவதற்கான வைத்திய சான்றிதழ்களை, அரச வைத்தியசாலைகள் ஊடாக விநியோகிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக, போக்குவரத்து சேவைகள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.