சம்பிக்க ரணவக்க தொடர்பில் கலந்துரையாடல்

(UTV|COLOMBO) – கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தொடர்பில் எதிர்வரும் நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாட முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் குழுவினர் இன்று(20) கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபடவுள்ளது.

Read More

இலங்கைக்கான முன்னாள் சுவிஸ் தூதுவர் இலங்கைக்கு

(UTV|COLOMBO) – சுவிட்சர்லாந்து தூதரக பெண் அதிகாரி தொடர்பில் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் ஆராய அந்நாட்டு வௌிவிவகார திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியான இலங்கைக்கான முன்னாள் சுவிஸ் தூதுவரான ஜோர்ஜ் ப்ரீடன் இலங்கை வரவுள்ளதாக சுவிஸ் வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இவ்வாறு அனுபவமிக்க இராஜதந்திரியின் தலைமையின் கீழ் கொழும்பு சுவிட்சர்லாந்து தூதரகத்தின் பாதுகாப்பு சம்பவம் தொடர்பில் தௌிவுபடுத்தும் சந்தர்ப்பத்தை ஆராய முடியும் என அறிக்கை ஒன்றை வௌியிட்டு சுவிட்சர்லாந்து வௌிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Read More

நாட்டின் சில இடங்களில் 150 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி

(UTV|COLOMBO) – நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மாவட்டத்திலும் சில இடங்களில் 100-150 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு, ஊவா, மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தறை மாவட்டத்திலும் சில இடங்களில் 75-100 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

Read More

ரயில் சேவையில் பாதிப்பு

(UTV|COLOMBO) – மருதானை மற்றும் தெமடகொட ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் இயந்திரம் ஒன்றும் ரயில் பெட்டி ஒன்றும் தடம்புரண்டமை காரணமாக பிரதான வீதியின் மற்றும் புத்தளம் வீதியின் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

Read More

போதைக்கு அடிமையான தந்தை – திண்டாடும் ஆறு குழந்தைகள் [VIDEO]

(UTV|COLOMBO) – இன்னோரன்ன காரணங்களுக்காக கிடைக்கின்ற குழந்தைகளை குழி தோண்டி புதைக்கும் தாய்மார்கள் பற்றிய கதைகளை நாம் கேள்விப்பட்டிருப்போம் ஆனால் பொருளாதார கஷடங்களுக்கு மத்தியிலும் 06 குழந்தைகளை ஒரு தாயாக காப்பாற்றும் இரும்புத் தாய் பற்றிய தகவல எமக்கு கிடைத்தது. அந்த இரும்புத்தாயை தேடி நாங்கள் நேற்று வத்தளைக்கு சென்றறோம்.

Read More

நாமல் குமார தொடர்ந்தும் விளக்கமறியலில்

(UTV|COLOMBO) – ஏப்ரல் 21, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் மக்கள் மத்தியில் நிலவிய அமைதியின்மை காரணமாக கைது செய்யப்பட்ட நாமல் குமார இம்மாதம் 26ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க ஹெட்டிபொல நீதிவான் நீதிமன்றம் இன்று(18) உத்தரவு பிறப்பித்துள்ளது.

Read More

இலங்கை அரசுக்கு 25 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க அனுமதி

(UTV|COLOMBO) – இலங்கையின் முக்கிய அரச மற்றும் பொது நிதி மேலாண்மை நடவடிக்கைகளின் வெளிப்படைத்ததன்மை மற்றும் வினைத்திறனை மேம்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கத்திற்கு 25 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு உலக வங்கி அனுமதி வழங்கியுள்ளது.

Read More

எக்னெலிகொட வழக்கு விசாரணைக்கு திகதி குறிப்பு

(UTV|COLOMBO) – ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான வழக்கு, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி முதல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மூவரடங்கிய கொழும்பு விசேட மேல் நீதிமன்றம் இன்று(18) உத்தரவு பிறப்பித்துள்ளது.

Read More

பாராளுமன்றம் மார்ச் மாதம் கலைக்கப்படும்

(UTV|COLOMBO) – மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடாத்துவதாகவும் எதிர்வரும் மார்ச் மாதத்தில் பாராளுமன்றத்தினை கட்டாயமாக கலைப்பதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Read More

மழையுடனான காலநிலை மேலும் அதிகரிப்பு

(UTV|COLOMBO) – நாடு முழுவதும், குறிப்பாக வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் மேலும் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை…

Read More