(UTV|COLOMBO) – கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தொடர்பில் எதிர்வரும் நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாட முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் குழுவினர் இன்று(20) கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபடவுள்ளது.
முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாச தலைமையில் இடம்பெறவுள்ள குறித்த கலந்துரையாடலில் ரஞ்சித் மத்துமபண்டார, தலதா அதுகோரள, அசோக் அபேசிங்க, அஜித் பி.பெரேரா, ஹர்ஷ டி சில்வா, இரான் விக்கிரமரத்ன மற்றும் சந்திராணி பண்டார ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர்.
2016ம் ஆண்டு ராஜகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் கைதான முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவை எதிர்வரும் 24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நேற்று(19) நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.