Category: உள்நாடு
தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள விசேட அறிவிப்பு
(UTV|கொழும்பு) – கடந்த 5 ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள அனைத்து கட்சியினரும் தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர் விபரங்களை எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
லெபனான் – காயமடைந்த இலங்கையர்களின் எண்ணிக்கை உயர்வு
(UTV|கொழும்பு) – கடந்த 4 ஆம் திகதி லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்துள்ள இலங்கையர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.
பெரும்பாலான மாகாணங்களில் மழை பெய்யுக் கூடும்
(UTV|கொழும்பு) – நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யுக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ, மத்திய, மேல், தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாடு முழுவதும், குறிப்பாக வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது….
SLPP தேசிய பட்டியல் உறுப்பினர்கள்
(UTV|கொழும்பு) – 2020 பொதுத் தேர்தல் முடிவுகளுக்கு அமைய ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் தேசியப்பட்டியில் பாராளுமன்றிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களின் பெயர் பட்டியலை தேர்தல் ஆணைக்குழுவிற்கு கையளித்துள்ளது.
கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும்
(UTV|கொழும்பு)- கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மனு உயர் நீதிமன்றத்தினால் நிராகரிப்பு
(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் தாம் கைது செய்யப்படுவதை தடுக்குமாறு கோரி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு, உயர் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 2,564 பேர் குணமடைந்தனர்
(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 23 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஷானி அபேசேகர தொடர்ந்தும் விளக்கமறியலில்
(UTV | கம்பஹா) – முன்னாள் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோரை எதிர்வரும் 20ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கம்பஹா நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இலங்கையின் அரசியல் வரலாற்றில் பாரிய மாற்றம்
(UTV | கொழும்பு) – இலங்கையின் அரசியல் வரலாற்றில் 43 வருடங்களின் பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி பாரிய வெற்றியை பதிவு செய்துள்ளது. 1977ஆம் ஆண்டின் பின்னர் தனிக்கட்சியாக 145 ஆசனங்களை பெற்று அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள்ளது. நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் 6,853,693 வாக்குகளை பெற்றுள்ளது. இது மொத்த வாக்குகளில் 59.09 சதவீதமாகும். அதற்கமைய 128 ஆசனங்களை பெற்றுள்ளது. பெற்றுக்கொண்ட வாக்குகளின் அடிப்படையில் பொதுஜன பெரமுன கட்சி, தேசிய பட்டியல் ஊடாக 17 ஆசனங்களை பெற்றுள்ளது….
தேர்தல் வரலாற்றில் மஹிந்த சாதனை
(UTV | கொழும்பு) – இலங்கை தேர்தல் வரலாற்றில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற வேட்பாளர் என்ற சாதனையை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ படைத்துள்ளார்.