லெபனான் – காயமடைந்த இலங்கையர்களின் எண்ணிக்கை உயர்வு

(UTV|கொழும்பு) – கடந்த 4 ஆம் திகதி லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்துள்ள இலங்கையர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.

காயமடைந்துள்ள இலங்கையர்கள் லெபனானில் உள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்றுவருவதாக லெபனானில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

மேலும், இலங்கையர்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்குவதற்காக தமது அலுவலகம் நாளாந்தம் செயற்படுவதாக அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.

வெடிப்பு சம்பவத்தில் பெய்ரூட்டில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு சேதம் ஏற்பட்டதாகவும் எவ்வாறாயினும் தூதரக பணியாளர்கள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 137 ஆக அதிகரித்துள்ள நிலையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, லெபனானனில் உள்ள இலங்கையர்கள் தொடர்பான தகவல்களை பெய்ரூட்டில் உள்ள இலங்கை தூதரகத்தினை தொடர்பு கொள்வதன் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 00 96 1 5 76 95 85 என்ற இலக்கத்திற்கு அழைப்பை ஏறபடுத்த முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *