இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள எலான் மஸ்க்.

உலகின் முதல் நிலை பணக்காரர்களில் ஒருவரான அமெரிக்க வர்த்தகர் எலான் மஸ்க் அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எலான் மஸ்க்கின் இலங்கை விஜயம் ஓகஸ்ட் மாதம் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையில் தனது Starlink செயற்கைக்கோள் இணைய சேவையை அறிமுகப்படுத்துவதற்காக இந்த விஜயம் அமையப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More

ஜனாதிபதித் தேர்தலில் இருந்து விலகிய ஜோ பைடன்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். கட்சி மற்றும் நாட்டின் நலனை கருத்தில் கொண்டு தான் இந்த முடிவை எடுத்ததாக ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க  ஜனாதிபதித் தனது சமூக வலைத்தளம் மூலம் தனது முடிவை அறிவித்துள்ளார். அமெரிக்க  ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது.

Read More

தொடரும் ஆர்ப்பாட்டங்கள் – 35க்கும் அதிகமானவர்கள் பலி – ஊரடங்கை அறிவித்தது பங்களாதேஷ் அரசாங்கம்.

அரசவேலைவாய்ப்பில் ஒதுக்கீட்டு முறைகளிற்கு எதிரான மாணவர்களின் போராட்டம் பெரும் வன்முறையாக மூண்டுள்ளதை தொடர்ந்து பங்களாதேஸ் தலைநகர் டாக்காவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை 35க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த  நிலையிலேயே அரசாங்கம் ஊரடங்கை அறிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை நர்சிங்டி சிறைச்சாலை மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோடியுள்ள நிலையிலேயே பிரதமர் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு இராணுவத்தை பயன்படுத்தப்போவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. வன்முறைகள் மூண்டதை தொடர்ந்து சுமார் 67 பேர் உயிரிழந்துள்ளனர் என…

Read More

பிரதமரின் உயரத்தை கிண்டலடித்த பத்திரிகையாளர் – 5,000 யூரோக்கள் அபராதம்.

இத்தாலி நாட்டின் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின் உயரம் குறித்து கிண்டலடித்த அந்நாட்டு பெண் பத்திரிகையாளருக்கு நீதிமன்றம் 5,000 யூரோக்கள் அபராதம் விதித்துள்ளது. இத்தாலியில் சுயாதீன பத்திரிகையாளராக செயல்பட்டு வரும் ஜியுலியா கோர்ட்டீஸ் கடந்த 2021 இல் தனது எக்ஸ் பக்கத்தில் தற்போதைய பிரதமர் மெலோனியின் பின்னணியில் இத்தாலிய சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினி இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு மெலோனியின் உயரம் குறித்து கிண்டலடிக்கும் வகையில் பதிவிட்டிருந்தார். ஜியோர்ஜியா மெலோனி…நீங்கள் என்னைப் பயமுறுத்த வேண்டாம். நீங்கள் 1.2 மீட்டர் (4…

Read More

ஓமான் கடலில் கப்பல் மூழ்கியதில் காணாமல் போன 9 பேர் மீட்பு

ஓமான் கடற்பிராந்தியத்தில் எண்ணெய் தாங்கிக் கப்பல் மூழ்கியதில் காணாமல் போயிருந்த 16 பேரில் 9 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இந்திய கடற்படைக்கு சொந்தமான INS டெக் யுத்த கப்பல் மூலம் இவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட 9 பேரில் ஒருவர் இலங்கையை சேர்ந்தவர் என்பதுடன் எஞ்சிய 8 பேரும் இந்திய பிரஜைகள் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. காணாமல் போனோரை மீட்பதற்காக இந்திய கடற்படையின் P 81 ரக விமானமும் பயன்படுத்தப்பட்டிருந்தது. ஓமான் கடற்பிராந்தியத்தில் எண்ணெய் தாங்கிக் கப்பலொன்று மூழ்கி…

Read More

சீனாவில் தீ விபத்து – 16 பேர் பலி.

சீனாவில் வணிகவளாகமொன்றில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக 16 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவின் சிச்சுவான் மாகாணத்தின் சிகொங் நகரில் இந்த தீவிபத்து இடம்பெற்றுள்ளது. 14 மாடிக்கட்டிடத்திலிருந்து பெரும்புகை மண்டலம் வெளிவருவதை காண்பிக்கும் படங்களும் வீடியோக்களும் வெளியாகியுள்ளன. வணிகவளாகத்தின் பல்கனிகளில் பெருமளவு மக்கள் காணப்படுவதையும் காண முடிந்துள்ளது. வணிகவளாகத்திற்கு 300க்கும் மேற்பட்ட தீயணைப்புவீரர்களையும் வாகனங்களையும் அனுப்பியதாகவும் 39 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கட்டுமானபணிகளின் காரணமாகவே தீவிபத்து ஏற்பட்டமை ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Read More

ஜோ பைடனுக்கு கொவிட்-19 தொற்று உறுதி.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதிக்கு ஏற்பட்டிருந்த நோய் அறிகுறிகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஏற்கனவே ஜோ பைடனுக்கு இரண்டு முறை கொவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், பின்னர் குணமடைந்தார். 81 வயதான அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், தனது சுகவீனம் காரணமாக இன்று (18) நடைபெறவிருந்த அரசியல் பிரச்சாரக் கூட்டத்தையும் ரத்து செய்துள்ளார்.

Read More

எண்ணெய் கப்பலின் பணியாளர்களை தேடும் நடவடிக்கை தொடர்கிறது

ஓமான் கடற்பரப்பில் எண்ணெய்க்கப்பல் கவிழ்ந்ததில் காணாமல்போன 16 பேரை தேடிக்கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் தொடரும் அதேவேளை இந்தியா தனது கடற்படை கப்பலான ஐஎன்எஸ் டெக்கினை ஈடுபடுத்தியுள்ளது. இந்தியா தேடுதல் மற்றும் மீட்பு பணிகளில் தனது பி81 கடல்சார் கண்காணிப்பு விமானத்தையும் ஈடுபடுத்தியுள்ளது. கொமொரோஸ் கொடியுடன் பயணித்துக்கொண்டிருந்த எண்ணெய் கப்பல் கவிழ்ந்ததில் மூன்று இலங்கையர்கள் 13 இந்தியர்கள் உட்பட 16 பேர் காணாமல்போயுள்ளனர். பிரெஸ்டிஜ் பல்கன் என்ற கப்பலே கவிழ்ந்துள்ளது.

Read More

டிரம்ப்-ஐ சுடுவதற்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகளுக்கு தடை

அமெரிக்காவில் இந்த ஆண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடனும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோரும் களத்தில் உள்ளனர். அதிபர் தேர்தலை ஒட்டி அந்நாட்டு தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. இரு வேட்பாளர்களும் தேர்தல் பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப்…

Read More

ஓமான் அருகே இலங்கையர்களுடன் மூழ்கிய எண்ணெய் கப்பல்!

ஓமான் அருகே எண்ணெய் கப்பல் ஒன்று கடலில் மூழ்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அந்த கப்பலில் 16 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்களில் 13 இந்தியவர்களும் மூன்று இலங்கையர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. ஏமன் நாட்டில் உள்ள ஏடன் துறைமுகத்தை நோக்கி கப்பல் சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

Read More