சீனாவில் தீ விபத்து – 16 பேர் பலி.

சீனாவில் வணிகவளாகமொன்றில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தின் சிகொங் நகரில் இந்த தீவிபத்து இடம்பெற்றுள்ளது.

14 மாடிக்கட்டிடத்திலிருந்து பெரும்புகை மண்டலம் வெளிவருவதை காண்பிக்கும் படங்களும் வீடியோக்களும் வெளியாகியுள்ளன.

வணிகவளாகத்தின் பல்கனிகளில் பெருமளவு மக்கள் காணப்படுவதையும் காண முடிந்துள்ளது.

வணிகவளாகத்திற்கு 300க்கும் மேற்பட்ட தீயணைப்புவீரர்களையும் வாகனங்களையும் அனுப்பியதாகவும் 39 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கட்டுமானபணிகளின் காரணமாகவே தீவிபத்து ஏற்பட்டமை ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *