சவூதியில் துல்ஹஜ் மாத பிறை தென்பட்டது – ஞாயிறு பெருநாள்
சவுதி அரேபியாவில் இன்று துல்ஹஜ் மாதத்திற்கான பிறை பார்ப்பதற்குண்டான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில், இன்று பிறை தென்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. நாளை (07-06-24) அன்று துல்ஹஜ் மாதத்தின் முதல் நாளாகும். 15-06-24 சனிக்கிழமை அன்று ஹாஜிகள் அரஃபா மைதானத்தில் கூடுவார்கள். ஞாயிற்றுக்கிழமை 16-06-24 அன்று ஹஜ்ஜூப் பெருநாள் கொண்டாடப்படும்.