இலங்கை – பங்களாதேஷ் ரெஸ்ட் கிரிக்கட் தொடர் மார்ச் 7ம் திகதி ஆரம்பம்

(UDHAYAM, COLOMBO) – இலங்கை –பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான ரெஸ்ட் கிரிக்கட் சுற்றுத்தொடர் மார்ச் மாதம் 7ம் திகதி ஆரம்பமாகவுள்ளது. காலி சர்வதேச மைதானத்தில் இந்த ரெஸ்ட் கிரிக்கட் சுற்றுத்தொடர் நடைபெற்றவுள்ளது. வேகப்பந்துவீச்சாளர் முஸ்தபிஸ் ரஹ்மான் 2015 ஆம் ஆண்டின் பின்னர் ரெஸ்ட் போட்டிக்காக மீண்டும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். அணியின் முதல் வரிசை துடுப்பாட்ட வீரர் இம்றுல் கைஸ் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்துள்ளார். இலங்கை அணியுடனான இந்த சுற்றுத்தொடரில் முஸ்பிக்குர் ரஹீம் பங்களாதேஷின் தலைவராக பணியாற்றுவார்.

Read More

நியூசிலாந்து 6 ஓட்டங்களால் வெற்றி

(UDHAYAM, NEW ZEALAND) – தென்னாபிரிக்காவுடன் இடம்பெற்ற இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் நியூசிலாந்து அணி 6 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. க்ரிஸ்ட்சர்ச்சில் இடம்பெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கட்டுக்களை இழந்து 289 ஓட்டங்களை பெற்றது. இதன் போது ரோஸ் டெய்லர் ஆட்டமிழக்காமல் 102 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கட்டுக்களை இழந்து 283 ஓட்டங்களை மாத்திரமே…

Read More

இறுதி 20/20 போட்டியின் இலங்கை அணி விபரம் இதோ!

(UDHAYAM, COLOMBO) – அவுஸ்திரேலியா அணிக்கெதிரான மூன்றாவது இருபதுக்கு போட்டியில் நாயண சுழற்சியில் வெற்றி பெற்றுள்ள இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்துள்ளது. அவுஸ்திரேலியா அடிலெய்ட் மைதானத்தில் இந்த போட்டி இடம்பெறுகின்றது. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் இரு அணி வீரர்களினதும் பெயர் விபரங்கள் இதோ.   Sri Lankan Team W.U. Tharanga E.M.D.Y. Munaweera B.K.G. Mendis D.A.S. Gunarathne M.D. Shanaka T.A.M. Siriwardena C.K. Kapugedara Prasanna K.M.D.N. Kulasekara S.L….

Read More

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து விலகிய உசைன் போல்ட்!!

(UDHAYAM, TOKYO) – 2020ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளும் திட்டம் தம்மிடம் இல்லை என்று குறுந்தூர ஓட்ட வீரர் உசைன் போல்ட் தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார். மூன்று ஒலிம்பிக் போட்டிகளில் மும்மூன்று பதக்கங்களை வென்று போல்ட் சாதனைப் படைத்திருந்தார். எனினும் 2008ம் ஆண்டு அவர் அஞ்சல் ஓட்டப் போட்டியில் வென்ற தங்கப் பதக்கத்தை, சக வீரரின் ஊக்கமருந்து பாவனையால் மீளளிக்க வேண்டிய நிலை…

Read More

நிரோஷன் திக்வெல்லவிற்கு போட்டித் தடை

(UDHAYAM, COLOMBO) – அண்மையில் இடம்பெற்ற இருபதுக்கு 20 போட்டியில் ஒழுக்க மீறல் காரணமாக இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் நிரோஷன் திக்வெல்லவிற்கு சர்வதேச கிரிக்கட் சபை போட்டித் தடை விதித்துள்ளது. ஒரு ஒருநாள் போட்டியும், ஒரு இருபதுக்கு 20 போட்டியிலும் விளையாட அவருக்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த தடையால் அவுஸ்திரேலிய அணியுடன் நாளை இடம்பெறவுள்ள இருபதுக்கு 20 போட்டியில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.

Read More

மகளிர் உலகக் கிண்ண தகுதிகான் போட்டிகள் தற்போது கொழும்பில்

(UDHAYAM, COLOMBO) – இலங்கை மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகளுக்கு இடையிலான போட்டி கொழும்பு என். சி. சி. மைதானத்தில் தற்போது இடம்பெறுகின்றது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை மகளிர் அணி, முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது. இந்த நிலையில், முதலில் துடுப்பெடுத்தாடிவரும் பாகிஸ்தான் மகளிர் அணி, 7 விக்கட்டுக்களை இழந்து 212 ஓட்டங்களைப் பெற்றது. இதேவேளை, இந்திய மற்றும் தென்னாபிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையிலான போட்டி கொழும்பு பி. எஸ். எஸ் மைதானத்தில் இடம்பெறுகின்றது….

Read More

லசித் மாலிங்க மீண்டும் களத்தில்!… 5 விக்கட்டுகளால் இலங்கை அணி வெற்றி

(UDHAYAM, COLOMBO) – அவுஸ்திரேலியா பிரதமர் அணிக்கும் மற்றும் சுற்றுலா இலங்கை அணிக்கும் இடையில் இன்று இடம்பெற்ற இருபதுக்கு இருபது பயிற்சிப் போட்டியில் 5 விக்கட்டுக்களால் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்தது. அதன்படி , முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய பிரதமர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து 169 ஓட்டங்களை பெற்றது . எடம் வொஜஸ் ஆட்டமிழக்காமல் 54 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்….

Read More

இங்கிலாந்து கிரிக்கட் அணியின் புதிய தலைவர் நியமனம்

(UDHAYAM, ENGLAND) – இங்கிலாந்து கிரிக்கட் அணியின் தலைவராக அந்த அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் ஆன ஜோ ரூட் நியமிக்கப்பட்டுள்ளார். பென் ஸ்டோக்ஸ் துணைத்தலைவர் ஆவார். இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைவராக இருந்தவர் அலஸ்டைர் குக். சமீபத்தில் இங்கிலாந்து அணி பங்களாதேஷிற்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், இந்தியாவிற்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடியது. பங்களாதேஷிற்கு எதிரான தொடரை 1-1 என சமன் செய்த இங்கிலாந்து, இந்தியாவிற்கு எதிரான…

Read More

ஷந்திமாலுக்கு ஓய்வு

(UDHAYAM, CAPE TOWN) – சுற்றுலா இலங்கை அணிக்கும் தென்னாபிரிக்க அணிக்கும் இடையிலான நான்காவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. கேப் டவுனில் இந்த போட்டி இடம்பெறவுள்ளது. இந்த போட்டியில் இலங்கை அணி வீரர் தினேஸ் ஷந்திமாலுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு பதிலாக சந்துன் வீரகொடி அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இதுவரையில் இடம்பெற்றுள்ள மூன்று போட்டிகளிலும் தொன்னாபிரிக்க அணி வெற்றிப்பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. இந்த…

Read More

தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் கூரை மேல் ஏறி உண்ணாவிரத போராட்டம்!

(UDHAYAM, COLOMBO) – தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதான தொழிலாளர்கள் சிலர் தற்போதைய நிலையில் மைதானத்தின் கூரைக்கு மேல் ஏறி உண்ணாவிரத போராட்டமொன்றில் ஈடுபட்டுள்ளனர். ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் 11 தொழிலாளர்கள் இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டுள்ள நிலையில் , 10 வருடமாக தொழில் புரியும் எமக்கு இதுவரை நிரந்தர நியமனம் வழங்க இலங்கை கிரிக்கட் நிறுவனம் நடவடிக்கை எடுக்க வில்லை என தெரிவித்து இந்த உண்ணாவிர போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. தமது சேவையினை நிரந்தரமாக்கும் வரையில் தாம்…

Read More