Category: சூடான செய்திகள் 1
அமைச்சரவை மாற்றங்களுடன் கூட்டு அரசாங்கம் தொடரும்
(UTV|COLOMBO)-தற்போதைய கூட்டு அரசாங்கம் தொடர்ந்து இயங்கும் என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார். அதேவேளை எதிர்வரும் நாட்களில் அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறினார். கொழும்பில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். இந்த ஊடக சந்திப்பில் தொடர்ந்து உரையாற்றிய அவர், அரசாங்கத்திற்குள் இருந்து கொண்டு வௌியில் சென்று விமர்சனம் செய்ததன் காரணமாக இந்த நெருக்கடி நிலை தோன்றியுள்ளது என்றும் அவர் கூறினார். …
சிறிய மற்றும் ஆரம்ப கைத்தொழில் பிரதியமைச்சராகமுத்து சிவலிங்கம் சத்திய பிரமாணம்
(UTV|COLOMBO)-சிறிய மற்றும் ஆரம்ப கைத்தொழில் பிரதியமைச்சராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் முத்து சிவலிங்கம் சத்திய பிரமாணம் செய்து கொண்டுள்ளார். இன்று நண்பகல் 12.15 மணியளவில் அவர் சத்திய பிரமாணம் செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அரசாங்கத்தினை அமைக்க ஐக்கிய தேசிய கட்சிக்கு எந்த ஓர் சந்தர்ப்பத்திலும் ஆதரவு வழங்கப்படமாட்டாது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளர் ஆறுமுகம் தொண்டமான் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV…
அம்பாறை நகரில் மிலேச்சத்தனமான தாக்குதல்…
(UTV|COLOMBO)-அம்பாறையில் இடம்பெற்றது போன்று, இந்த நாட்டில் இவ்வாறான மோசமான சம்பவங்கள் இனிமேலும் இடம்பெறாத வண்ணம் பாதுக்காப்புத் தரப்பினர் முன்கூட்டியே நடவடிக்கை எடுத்து அதனை உறுதிப்படுத்த வேண்டுமென, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தினார். அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தில், அரசாங்க அதிபர் துசித பி வனிகசிங்க தலைமையில் இன்று மாலை (28) இடம்பெற்ற உயர்மட்டக் கூட்டத்தில், அமைச்சர் இவ்வாறு வலியுறுத்தினார். பொலிஸ், இராணுவ உயரதிகாரிகள் கலந்துகொண்ட இந்த உயர்மட்டக் கூட்டத்தில்…