ஆசிரியரின் தாக்குதலுக்கு இழக்காகிய மாணவன் வைத்தியசாலையில் – [photos]

(UDHAYAM, COLOMBO) – ஆசிரியரால் தாக்கபட்ட பாடசாலை மாணவன் வைத்தியசாலையில் அனுமதி
போலிஸ நிலையத்தில் பெற்றோர் முறைபாடு.
ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட நோர்வூட் சென் ஜோன் டிலரி தமிழ் வித்தியாளயத்தில் தரம் 10ல் கல்வி பயிலும் மாணவன் ஒருவரை ஆசிரியர் ஒருவர் தாக்கியமையால் குறித்த மாணவன் பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெறிவித்தனர்.
இந்த சம்பவம் 09.07.2017.வெள்ளிகிழமை பிற்பகல் 12.35 மணி அளவில் இடம் பெற்றதாக தெறிவிக்கபடுகிறது.
குறித்த மாணவனுக்கு ஆசிரியர் ஒருவாரல் பாடவேலை திட்டம் ஒன்று வழங்கிய போது குறித்த மாணவண் இரண்டாவது முறையாக குறித்த பாடத்தினை செய்து காட்டிமைக்காக குறித்த ஆசிரியர் மாணவனை தலைபகுதியை பிடித்து கதிரையில் அடித்ததாகவும் மாணவனின் உடம்பில் பின்பகுதியில் கையால் தாக்கியதாக பாதிக்கபட்ட சிறுவனின் பெற்றோர்கள் முறைபாட்டில் தெறிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தாக்கபட்ட மாணவனின் பெற்றோரால் பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யபட்டுள்ளதோடு பதிவு செய்யபட்டு முறைபாட்டை நோர்வூட் பொலிஸாருக்கு தகவல் வழங்கபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெறிவித்தனர்.
சம்பவத்தில் பாதிக்கபட்ட மாணவன் அமரேசன் வினுஷான் எனவும் பொலிஸார் தெறிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் நோர்வூட் பொகவந்தலாவ பொலிஸார் விசாரனைகளை ஆரம்பித்துள்ளதோடு குறித்த ஆசிரியரை கைது செய்வதற்கான நடவடிக்கைளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நோட்டன்பிரிஜ் நிருபர். எஸ்.சதீஸ்

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/l.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/ll.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/lll.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/llll.jpg”]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *