இளைஞர்களை கடத்திய சம்பவம்-சந்தன பிரசாத்தின் விளக்கமறியல்காலம் நீடிப்பு

(UTV|COLOMBO)-11 இளைஞர்களை கடத்தி காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட லெப்டினன்ட் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி இம்மாதம் 25ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்று கோட்டை உத்தியோகபூர்வமற்ற பதில் நீதவான் ஜயந்த டயஸ் நாணாயக்கார முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2008- 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கடந்த மாதம் 13ம் திகதி இவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *