பல்கலைக்கழக விரிவுரையாளர்களால் பிரதமரிடம் முக்கிய ஐந்து கோரிக்கைகள் சமர்ப்பிப்பு

(UTV|COLOMBO)-அரச பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் பிரதான ஐந்து யோசனைகளை முன்வைத்துள்ளனர்.

அரசியலமைப்பு திருத்தம் செய்வது கைவிடப்படவேண்டும். நாட்டின் பொருளாதாரத்தை பாதிப்படையச் செய்த மத்திய வங்கி மோசடி தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் மக்களுக்கு தெரியப்படுத்தும் அதேவேளை அது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்து குற்றவாளிகளுக்கு தண்டனைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.

அத்துடன் முன்னாள் வெளிவிவகார அமைச்சரான மங்கள சமரவீர அரசாங்கத்தின் எவ்வித அனுமதியுமின்றி ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தான் நினைத்தபடி இணை அனுசரணை வழங்கிய 30/1 எனும் ஆலோசனை மற்றும் அதற்கு அடிப்படையாக இருந்த OISL ஆணையாளர் அறிக்கையை ரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

பிரதேச வேறுபாடின்றி தொல்பொருள்கள் மற்றும் தேசிய மரபுரிமைகளை பாதுகாக்க அரசாங்கம் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு நேரடியாக முதலீடுகளைப் பெற்றுக் கொள்ளும் முறையை நிறுத்தி அதனை கண்காணிக்கும் வகையில் அரசாங்கம் விசேட பொறிமுறையொன்று உருவாக்கப்பட வேண்டுமென்றும் எனவும் அந்த யோசனைகள் அமையப் பெற்றுள்ளன.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று(01) பல்கலைக்கழக விரிவுரையாளர்களை பிரதமர் அலுவலகத்தில் சந்தித்து பேச்சு நடத்தினார். இதன்போதே விரிவுரையாளர்கள் தேசிய முக்கியத்துவம் பெற்ற ஐந்து யோசனைகளை பிரதமரிடம் முன்வைத்தனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *